- Advertisement 3-
Homeவிளையாட்டுஇப்படி ஒரு மனசா.. சம்பவம் செஞ்ச அஸ்வினுக்காக அனில் கும்ப்ளே சொன்ன வார்த்தை..

இப்படி ஒரு மனசா.. சம்பவம் செஞ்ச அஸ்வினுக்காக அனில் கும்ப்ளே சொன்ன வார்த்தை..

- Advertisement 1-

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்த சமயத்தில் அனைவருமே அதில் அறிமுகமான இளம் வீரர் சர்ப்ராஸ்கான் பற்றி அதிகம் பேசி வந்தனர். முதல் சர்வதேச டெஸ்டின் முதல் நாளிலேயே அரைச்சதம் கடந்து அசத்தியிருந்த சர்பராஸ் கான், இன்னும் பல சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைப்பார் என்றும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தற்போதே நம்பிக்கையுடன் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் தற்போது இரண்டாவது நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், அனைவருமே ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் பற்றி பேசி வருகின்றனர். இரண்டாவது நாளின் முடிவில் நாட் அவுட் ஆகாமல் நிற்கும் பென் டக்கட், 118 பந்துகளில் 133 ரன்கள் என அதிரடியாக அடி வருகிறார். இன்னொரு பக்கம் அஸ்வினை பற்றி பலரும் பேசுவதற்கு மிக முக்கிய காரணம், சாக் கிரவுலி விக்கெட்டை அவர் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற அரிய சிறப்பை பெற்றுள்ளார்.

இவருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் இன்னும் கொஞ்சம் டெஸ்ட் போட்டிகள் ஆடும் பட்சத்தில் அஸ்வின் நிச்சயம் அந்த சாதனையையும் முறியடித்து இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்து நம்பர் ஒன் பந்து வீச்சாளர் என்ற இடத்தையும் தொட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், அதிவேகமாக 500 விக்கெட்டுகளை தொட்ட இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெயரை எடுத்துள்ள அஸ்வினுக்கு மிக முக்கியமான ஒரு மெசேஜை அணில் கும்ப்ளே தற்போது தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

சமீபத்தில் அஸ்வினின் சாதனை பற்றி பேசிய அனில் கும்ப்ளே, “வாழ்த்துக்கள் அஸ்வின். உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. 500-ஐ கடந்து 620, 625, 700 என சென்று கொண்டே இருங்கள். அங்கு தான் நீங்கள் சென்று முடிய வேண்டும். 700 க்கு குறைவாக ஒரு போதும் நீங்கள் விக்கெட்டுகளை எண்ணி விடக்கூடாது” என அறிவுறுத்தி உள்ளார்.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே ஒரு முறை பேசியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், நிச்சயம் இந்திய ஜாம்பவான் அணில் கும்ப்ளேவின் 619 விக்கெட்டுகளை கடக்காமல், 618 விக்கெட்டுகள் எடுக்கும் போது டெஸ்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாகவும், அதுவே அனில் கும்ப்ளேவுக்கு தான் செய்யும் மரியாதை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது அஸ்வின் மரியாதை கொடுக்க நினைத்த ஜாம்பவான் அணில் கும்ப்ளேவே அதையெல்லாம் கடந்து 700 விக்கெட்டுகளை இலக்காக கொண்டு ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளதால் அஸ்வின் அதற்கான வழியில் தான் இனி பயணிப்பார் என்றும் தெரிகிறது.

சற்று முன்