Homeகிரிக்கெட்இந்த சிஎஸ்கே வீரர் உலகக்கோப்பை அணியில் இல்லாமல் போனதற்கு காரணம் கோலியும், ரவி சாஸ்திரியும் தான்....

இந்த சிஎஸ்கே வீரர் உலகக்கோப்பை அணியில் இல்லாமல் போனதற்கு காரணம் கோலியும், ரவி சாஸ்திரியும் தான். இது அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு – அனில் கும்ப்ளே சாடல்

-Advertisement-

அம்பதி ராயுடு தனது ஆறாவது ஐபிஎல் கோப்பையை வென்று (சென்னை சூப்பர் கிங்ஸிற்காக மூன்றாவது கோப்) மகிழ்ச்சிகரமாக தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். ராயுடு, இந்திய கிரிக்கெட்டில் 55 ODIகள் மற்றும் 6 T20I போட்டிகளில் விளையாடிய போதிலும், அவரது இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் திறமைக்கு குறைவான சாதனைகளை நிகழ்த்தியதாகவே சொல்லலாம். அவரால் இந்திய ப்ளேயிங் லெவன் அணியில் நிரந்தர இடத்தைப் பெற முடியவில்லை.

செப்டம்பர் 2018 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில், ராயுடு இந்தியாவின் நம்பர் 4 வீரராக பல போட்டிகளை விளையாடி சிறப்பான பல இன்னிங்ஸ்களை தந்தார். ஐபிஎல் 2018 இல் விளையாடிய அவர் 602 ரன்கள் எடுத்து தனது T20 பேட்டிங் உச்சத்தை எட்டினார், அந்த காலகட்டத்தில் அவர் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தனது ஒருநாள் சதத்தையும் அடித்தார்.

-Advertisement-

இந்நிலையில்தான் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, ​​ராயுடுவின் பெயர் அதிர்ச்சியளிக்கும் வகையில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக தேர்வுக் குழுவினர் தொடக்க ஆட்டக்காரராக இருந்த கே எல் ராகுலை நான்காம் வீரராக மாற்றி களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த ஆண்டு ஐ.பி.எல்-ல் அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கரை அணிக்குள் இடம்பெறச் செய்தனர்.

இந்த முடிவு குறித்து ராயுடு சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். விஜய் சங்கர் ஒரு “3டி வீரர்” என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறிய கருத்தை கேலி செய்து, உலகக் கோப்பையைக் காண புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்து வாங்கியதாக அவர் ட்வீட் செய்திருந்தார். மேலும் உலகக் கோப்பையின் போது ராயுடு தனது ஓய்வை அறிவித்தார், ஆனால் பின்னர் தனது முடிவை திரும்பப் பெற்றார். ஆனாலும் துரதிர்ஷ்ட வசமாக , ராயுடு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடவில்லை. அதோடு அவரது சர்வதேச வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

-Advertisement-

இந்த நிலையில், இந்திய பந்துவீச்சு ஜாம்பவானும் முன்னாள் இந்திய பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே ராயுடுவை இங்கிலாந்துக்கு உலகக் கோப்பைத் தொடருக்கு அழைத்துச் செல்லாதது தவறு என்று கூறியுள்ளார். ராயுடுவை நீக்கியது அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் மிகப்பெரிய தவறு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: எனக்கு மட்டும் இந்த பவர் கெடச்சா WTC பைனல்ல அதை பயன்படுத்தி பீல்டிங்ல சும்மா தெறிக்க விடுவன். என் இதையத்துல எப்போவுமே அதுக்கு ஒரு தனி இடம் உண்டு – சுப்மன் கில் பேச்சு

இது குறித்து அவர் “ராயுடு 2019 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு பெரிய தவறு. நீங்கள் அவரை அந்த நான்காவது வீரருக்கான ரோலுக்காக அவ்வளவு காலம் தயார் செய்தீர்கள். பின்னர் அவரை அணியில் எடுக்கவில்லை. அவருடைய பெயர் அணியில் இருந்து எடுக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது,” என ஜியோ சினிமா லைவ் கமெண்ட்ரியில் இதை கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்