உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போன்ற மிகப்பெரிய தொடரை இந்தியா வரும் அக்டோபர் மாதம் நடத்துகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடர் இந்தியாவின் நடைபெறுவதால் இதனை சிறப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆனால் பி சி சி ஐ இடம் பணம் இருக்கும் அளவுக்கு அறிவு சுத்தமாக இல்லை என்பதை ஜெய்ஷா நிரூபித்து விட்டாராம். உலகக் கோப்பைத் தொடர் அட்டவணையை எப்போதும் ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பது தான் வழக்கமாக இருக்கும்.ஆனால் இம்முறை அட்டவணையை மூன்று மாதத்திற்கு முன்புதான் ரிலீஸ் ஆனது.
தற்போது இந்த அட்டவணையிலும் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு அட்டவணை தயாரிப்பதற்கு முன் ஏதேனும் அணிகளுக்கு சிக்கல் இருக்கிறதா பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு தான் அட்டவணையை உருவாக்குவார்கள்.
இந்த நிலையில் பிசிசிஐ அறிவித்த அட்டவணையில் பல குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே அகமதாபாத்தில் நவராத்திரி பூஜை விடுமுறையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாது என அம்மாநில காவல்துறை கூறியதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் மாற்றப்பட இருந்தது.
இதேபோன்று தற்போது கொல்கத்தாவிலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. நவம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் காளி பூஜை நடைபெற இருக்கிறது. இதனால் அன்றைய நாளில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை நடத்த பாதுகாப்பு தர முடியாது என்று காவல்துறை கைவிரித்து இருக்கிறது.
இதனால் மீண்டும் அட்டவணையை மாற்ற வேண்டிய சூழலில் ஜெய்ஷா தள்ளப்பட்டு இருக்கிறார். மேலும் ஐபிஎல் பாணியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆட்டம் என ஒவ்வொரு அணிக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.
இது அணியினருக்கு சரி வராது என்றும் இதன் மூலம் பல பிரச்சனைகள் உருவாகும் என்றும் சில மாநில கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அட்டவணையில் திரும்பப்பெற்று புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என தெரிகிறது.