- Advertisement 3-
Homeவிளையாட்டுபடுதோல்வி எதிரொலி.. வெளியான உத்தரவு.. வரிசைகட்டிய போலீஸ்.. ரசிகர்களால் அலறும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

படுதோல்வி எதிரொலி.. வெளியான உத்தரவு.. வரிசைகட்டிய போலீஸ்.. ரசிகர்களால் அலறும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

- Advertisement 1-

கடந்த வியாழன் கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின். இந்த போட்டியின் முடிவு இலங்கை அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களை மட்டுமே அடித்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் இந்த வெற்றி 48 ஆண்டுகால உலகக் கோப்பை தொடரில் மிகப் பெரிய வெற்றியாக மாறியது.

இப்படியான ஒரு மோசமான தோல்வியை இலங்கை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை என்பதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளியிடும் கருத்துக்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. அதே சமயம் இலங்கை அணியின் ரசிகர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீதும் கோவம் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக ரசிகர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படலாம் என்பதால், இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையின் போராட்ட தடுப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement 2-

போராட்ட தடுப்பு பிரிவினர் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனத்துடன் இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்தின் வெளியில் தயார் நிலையில் நிற்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அனைவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, போராட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை தகவலும் வெளியானது. இதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கை அணி தோல்வியை அடுத்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அணியின் பயிற்சியாளர் குழு மற்றும் தேர்வுக்குழு இந்த விவகாரம் குறித்து விரைந்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

சற்று முன்