- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல் மேட்ச்ல.. அதுவும் சீனியர் வீரர்கிட்டயேவா.. அர்ஜுன் டெண்டுல்கரின் செயல்.. கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்..

முதல் மேட்ச்ல.. அதுவும் சீனியர் வீரர்கிட்டயேவா.. அர்ஜுன் டெண்டுல்கரின் செயல்.. கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்..

- Advertisement 1-

ஐபிஎல் தொடரில் தற்போது அனைவரது பார்வையும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியில் மோதும் போட்டியில் இருந்து வருகிறது. ஆனால், அதே வேளையில் அதற்கு முன்பாக தற்போது நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் லக்னோ அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்து வருகிறது.

அப்படி ஒரு நிலையில் தான் தற்போது அவர்கள் ஆடிவரும் ஆட்டத்திற்கு அதுவும் இழந்து போய்விட்டது என்று தான் தெரிகிறது. லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியில் திலக் வர்மா, பும்ரா உள்ளிட்டோர் இடம்பெறாத நிலையில் அவர்களுக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசனில் களமிறங்கிய முதல் போட்டியாகவும் இது மாறி இருந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளைத் தாண்டி பிளே ஆப் சுற்றுக்கு லக்னோ அணி முன்னேற வேண்டும் என்றால் மிகப்பெரிய அளவில் ரன் ரேட் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று சூழலில் தான் அவர்கள் முதலில் பேட்டிங் ஆடி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டனர்.

டி காக்கிற்கு பதிலாக வந்த தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக களம் இறங்க முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்திருந்தார். இதன் பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் சாவ்லா பந்து வீச்சில் அவுட்டாக, 69 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

- Advertisement 2-

இதற்கு மத்தியில் தான் அர்ஜுன் டெண்டுல்கர் செய்த விஷயம் ஒன்று தற்போது அதிக பரபரப்பை கிரிக்கெட் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. தனது முதல் ஓவரை வீசுவதற்காக உள்ளே வந்தார் அர்ஜுன் டெண்டுல்கர். அப்போது அந்த ஓவரின் கடைசி பந்தை ஸ்டாய்னிஸ் எதிர்கொண்ட நிலையில் அது நேராக அர்ஜுன் கைக்கு சென்றது.

பந்தை கையில் எடுத்தவர் உடனடியாக ஸ்டம்பை நோக்கி எறிவது போன்று ஆக்ரோஷத்தில் ஸ்டாய்னிஸை எதிர்கொண்டார். இதனைப் பார்த்ததும் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான ஸ்டாய்னிஸும் அதே வேகத்தில் ஆக்ரோஷத்தில் கத்த, அர்ஜுனோ சிரித்தபடி திரும்பி நடந்து சென்றார். சச்சினின் மகன் என்ற தொனியில் இப்படி ஒரு ஆக்ரோஷத்தை தான் ஆடிய முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே ஒரு சீனியர் வீரரிடம் வெளிப்படுத்தி இருந்தது தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக பேசு பொருளாக மாறி உள்ளது.

சற்று முன்