- Advertisement -
Homeவிளையாட்டுபும்ரா இல்ல, அர்ஷதீப் சிங் தான்.. டி 20 போட்டியில் முதல் இந்திய வீரராக வரலாறு...

பும்ரா இல்ல, அர்ஷதீப் சிங் தான்.. டி 20 போட்டியில் முதல் இந்திய வீரராக வரலாறு படைத்த பவுலர்..

- Advertisement-

டி 20 உலக கோப்பை தொடரில் பல போட்டிகளின் முடிவுகள் எதிர்பார்த்ததை போல நடைபெறாமல் அப்படியே நேர்மாறாக அரங்கேறி வருகிறது. அதிலும் டி20 உலக கோப்பை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க அணி இரண்டு போட்டிகளில் அசத்தலான வெற்றியை பெற்று பட்டையை கிளப்பியது. கனடாவுக்கு எதிரான முதல் போட்டியில் 194 ரன்கள் இலக்கை அசால்டாக எட்டிப்பிடித்த அமெரிக்கா அணி, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் ஒரு கை பார்த்து விட்டது.

ஸ்கோர் டையாகி சூப்பர் ஓவர் வரைக்கும் போட்டி செல்ல, அதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இப்படி யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வெற்றியை தொடர்ந்து குவித்து வரும் அமெரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக மோதியது. இந்த இரண்டு அணிகளுமே தங்களின் முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்ததால் முதல் அணியாக யார் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவும் இது மாறி இருந்தது.

அந்த வகையில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் ஆடி இருந்த அதே அணி வீரர்களுடன் களமிறங்க முதலில் அமெரிக்க அணி பேட்டிங் செய்திருந்தது. நியூயார்க்கில் உள்ள இந்த மைதானத்தில் 100 ரன்களை தாண்டுவதே பெரிய விஷயமாக பார்க்கப்படும் சூழலில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட அமெரிக்காவால் 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் தான் எடுக்க முடிந்தது.

அந்த வகையில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், ஒன்பது ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஹர்திக் பாண்டியாவும் இரண்டு விக்கெட் எடுக்க முதல் இரண்டு போட்டிகளில் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு முறை ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா, இந்த முறை விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

- Advertisement-

பாகிஸ்தான் அணிக்கே ஆட்டம் காண்பித்த பும்ராவால் அமெரிக்க அணிக்கு எதிராக தனது பந்துவீச்சில் திறம்பட செயல்படாமல் போனதுடன் மட்டுமில்லாமல் அவரது ஒரே ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இந்திய பந்து வீச்சாளராக அசத்தலான சாதனை ஒன்றை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

டி 20 போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளர்கள் ஒரு சிலர் உள்ளனர். ஆனால் ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளராக மாறி உள்ளார் அர்ஷ்தீப் சிங். அதுமட்டுமில்லாமல் முதல் ஓவரிலேயே அமெரிக்காவின் இரண்டு விக்கெட்டுகளை காலி செய்து அந்த அணிக்கு வேட்டு வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்