- Advertisement -

பும்ராவ பத்தி பேசுனவங்க இவரை மறந்துட்டாங்களே.. முதல் இந்திய பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் தொட்ட உயரம்..

டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணி வென்றெடுப்பதற்கு முக்கிய காரணமாக இந்த தொடர் முழுக்க இருந்தது பந்து வீச்சு யூனிட் தான். சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 150 ரன்களுக்கு மேல் சில போட்டிகளில் அடித்திருந்தாலும் லீக் போட்டிகளில் அவர்களால் நூறு ரன்களை கடப்பதே சிரமமாகத்தான் இருந்து வந்தது.

அமெரிக்க மண்ணில் நடந்த இந்த போட்டியில் பிட்ச்கள் பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமாக இருக்க இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்கவே தடுமாறி இருந்தனர். நிலைமை அப்படி இருந்தும் இந்திய அணி குறைவான ரன்களை அடித்திருந்த போதும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை இந்திய அணி குவிக்கவும் காரணமாக இருந்தன.

- Advertisement -

இறுதிப் போட்டி வரையிலும் அது தொடர்ந்த நிலையில், கடைசி கட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கும் அவர்களது வேகப்பந்து வீச்சு தான் காரணமாக இருந்தது. இப்படி இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையில் ஆடிய 8 போட்டிகளிலும் வெற்றிகளை குவித்துள்ள நிலையில், ஒரு போட்டியில் கூட சொதப்பாமல் பந்த வீசியிருந்தனர் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்.

பேட்ஸ்மேன்கள் கூட பல போட்டியில் ரன் சேர்க்க தடுமாற, பந்து வீச்சில் எந்த குறையும் இல்லாமல் செயல்பட்டதற்கு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அதே வேளையில் இந்த தொடர் முழுக்க பெரிதாக பேசப்பட்டிருந்தவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா.

- Advertisement -

இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த பும்ரா, டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதினையும் வென்ற நிலையில், பலரும் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் பும்ராவுக்கு நிகராக இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்ததில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் பங்கும் மிகப்பெரியது.

டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் கூட 19 வது ஓவரை அற்புதமாக வீசி 4 ரன்கள் கொடுத்து தென்னாபிரிக்கா மீது நெருக்கடி அதிகரிக்கவும் அர்ஷ்தீப் சிங் காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளராக அர்ஷிதீப் சிங் மாறி உள்ளது பலரையும் அசர வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் பசல்ஹக் பரூக்கி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தலா 17 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். பந்துவீச்சாளராக ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை இந்த இருவர் தான் எடுத்துள்ளனர். இதனால், பும்ராவை விட ஒரு படி மேலே போய் அர்ஷிதீப் சாதித்துள்ளது கிரிக்கெட் அரங்கில் அதிக கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Recent Posts