- Advertisement -
Homeவிளையாட்டுகடைசி ஓவர் முன்னாடி சூர்யா சொன்ன அந்த வார்த்தை.. நான் நல்லா பவுலிங் பண்ண காரணம்...

கடைசி ஓவர் முன்னாடி சூர்யா சொன்ன அந்த வார்த்தை.. நான் நல்லா பவுலிங் பண்ண காரணம் அதான்.. ரகசியம் உடைத்த அர்ஷ்தீப்

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் மோதி வந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு அணிகளுமே மிகச் சிறப்பாக இந்த தொடர் முழுக்க ஆடி இருந்தாலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடரையும் கைப்பற்றி இருந்தது.

முதல் 4 போட்டிகளின் முடிவிலேயே இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு அணிகளும் தங்களின் கடைசி டி 20 போட்டியில் மோதிக் கொண்டன. தொடரை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அணி, கடைசி போட்டியில் களம் கண்டிருந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஷ்ரேயஸ் ஐயர், ஜிதேஷ் ஷர்மா, அக்சர் படேல் உள்ளிட்டோர் சிறப்பாக ரன் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடி ரன் எடுத்தாலும் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. இருந்தும் பென் மெக்டெர்மோட் மற்றும் மேத்யூ வேட் சிறப்பாக ஆடியதால் இந்தியா அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இருந்த போதும் 17 மற்றும் 19 வது ஓவர்களை வீசிய முகேஷ் குமார், இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்தார்.

- Advertisement-

மேலும், கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங், 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் உதவி செய்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், கடைசி ஓவரை தான் சிறப்பாக வீசியதற்கான காரணம் பற்றி அர்ஷ்தீப் சிங் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“முதல் மூன்று ஓவர்களில் நான் நிறைய ரன்கள் கொடுத்து விட்டதை உணர்ந்தேன். அதனால் இன்னொரு வாய்ப்புக்காகவும் நான் காத்திருந்தேன். மேலும் நான் சிறப்பாக அந்த பணியை செய்து இந்தியா வெற்றி பெறவும் உதவினேன். இதற்காக கடவுளுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடைசி ஓவரை நான் வீசுவதற்கு முன்பாக சூர்யகுமார் என்னிடம், ‘என்ன நடந்தாலும் நடக்கட்டும். அவர்கள் ஜெயித்தால் பேட்ஸ்மேனுக்கு கிரெடிட் போகும்’ எனக்கூறி என்னை தேற்றினார். (தான் சிறப்பாக பந்து வீசாதது பற்றி பேசிய அர்ஷ்தீப் சிங்) இன்னும் நிறைய கற்றுக் கொண்டு அதில் இருந்து மிகவும் பலமாக மீண்டு வருவேன்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்