- Advertisement -
Homeவிளையாட்டுஅர்ஷ்தீப் சிங்கை பழிதீர்த்த மும்பை பேட்ஸ்மேன்கள்… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

அர்ஷ்தீப் சிங்கை பழிதீர்த்த மும்பை பேட்ஸ்மேன்கள்… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை!

- Advertisement-

இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 16-ல் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. PCA ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டோன்-ஜிதேஷ் ஷர்மா ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணியை இமாலய இலக்குக்கு அழைத்துச் சென்றது.

பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் சுதாரித்து அதிரடியாக விளையாடி இலக்கை 19 ஆவது ஓவரிலேயே எட்டியது. இந்த போட்டியில் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.  இந்த போட்டியில் இஷான் கிஷன் , சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 116 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 200 பிளஸ் டோட்டலைத் துரத்தியது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை குறிவைத்து அட்டாக் செய்தனர் மும்பை இந்தியன் பேட்ஸ்மேன்கள். அவர் வீசிய 3.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி 66 ரன்களைக் கொடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றிலேயே பஞ்சாப் அணி பவுலர் ஒருவர் கொடுத்த மிக அதிகமான ஸ்கோர் ஆகும்.

சில நாட்களுக்கு முன்னர் இதே மும்பை இந்தியன்ஸ் அணியோடு வான்கடே மைதானத்தில் பஞ்சாப் அணி விளையாடிய போட்டியில் அபாரமாக பந்துவீசினார் அர்ஷ்தீப். கடைசி ஓவரை அவர் வீசும்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். அது மட்டுமில்லாமல் அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்களை பவுல்டு ஆக்கி ஸ்டம்ப்புகளை உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களின் இன்னிங்ஸ் முந்தைய போட்டிக்கு பழிதீர்த்துக் கொள்வது போல அமைந்தது.

- Advertisement-

சற்று முன்