- Advertisement -
Homeவிளையாட்டுகடைசி நேரத்துல பத்திரனா கிட்ட இத தான் சொன்னேன்... நான் பாத்தது ஒன்னு நடந்தது ஒன்னு.....

கடைசி நேரத்துல பத்திரனா கிட்ட இத தான் சொன்னேன்… நான் பாத்தது ஒன்னு நடந்தது ஒன்னு.. அசலங்கா பேட்டி

- Advertisement-

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் ஐந்தாவது போட்டியானது பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் சற்றும் குறைவில்லாமல் சுவாரஸ்யமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 42 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக ரிஸ்வான் 86 ரன்களையும், ஷபிக் 52 ரன்களையும், இப்திகார் அகமது 47 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக அந்த அணியின் மிடிலாளர் பேட்ஸ்மேன்களான குசால் மெண்டிஸ், சதிரா சமரவிக்ரமா ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக இலங்கை அணி வெற்றியை நோக்கி எளிதாக பயணித்தது.

இருப்பினும் இறுதி நேரத்தில் அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டுகளை இழக்கவே போட்டியின் கடைசி கட்டத்தின் போது திருப்பம் ஏற்பட்டது. குறிப்பாக கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்கிற நிலையில் இறுதி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது காலத்திலிருந்த அசலங்கா ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு ரன்கள் அடித்து இலங்கை அணியை த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பின்னர் போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய அசலங்கா கூறுகையில் : நான் கடைசி பந்தின் போது எந்த இடத்தில் அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓடலாம் என்று யோசித்தேன்.

- Advertisement-

மேலும் பீல்டர்கள் இல்லாத இடைவெளிகளில் பந்து அடித்து விட்டு 2 ரன்கள் ஓட முடியும் என்று நினைத்தேன். ஏனெனில் இது ஒரு பெரிய மைதானம். அதேபோன்று பதிரானவிடமும் கடைசி பந்தில் வேகமாக இரண்டு ரன்கள் ஓடி முடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினேன். இந்த இரண்டு விடயங்கள் தான் என் மனதில் இருந்தது.

கடைசி பந்தினை அவர் பவுன்சராக வீசுவார் அல்லது யார்காக வீசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஸ்லோவாக வீசிவிட்டார். அதேபோன்று அந்த பந்தையம் நான் சரியாக கணித்து இடைவெளியில் அடித்து வெற்றி இலக்கை எட்டினேன். குசால் மெண்டிஸ், சதீரா ஆகியோர் மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்தளம் இட்டு கொடுத்தார்கள். அதனாலேயே என்னால் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடிந்தது என அசலங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்