2023 ஆசியக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் ஸ்ரீலங்கா அணியும் மோதினம். பல்லேக்கேல் நகரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சகீப் அல் அசன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதில் தொடக்க வீரர்களான முகமது நைம் பதினாறு ரன்களும் தன்சித் ஹசன் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். ஆனால் அடுத்து வந்த வீரரான நஸ்முல் உசைன் சாந்தோ 122 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் ஏழு பவுண்டரிகளும் அடக்கம். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை எடுக்காததால் வங்காளதேச அணி 42.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 164 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்தப் போட்டியில் இலங்கை வீரரான பதிரனாவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 7.4 ஓவர்களை வீசி 32 ரங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். வங்காளதேச அணியை தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது என்றே கூற வேண்டும். துவக்க வீரர்களான பத்தும் நிசங்க14 ரன்களும் கருணாரத்னா ஒரு ரன்னும் எடுத்து வெளியேற குசல் மெண்டிஸ் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக வைக்கட்டுகளை இழந்து மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து நிலையில் அடுத்து வந்த வீரர்களான சதீரா சமரவிக்ரமா மற்றும் சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சமரவிக்ரமா 74 பந்துகளில் 54 ரன்கள் குவிக்க மறுபுறம் அசலங்கா 92 பந்துகளில் 62 ரன்களை குவித்து கடைசிவரை நாட் அவுட் ஆக இருந்தார். இந்த நிலையில் இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்து பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது.
#Asalanka-வின் ஆட்டம் தொடரும். 😎🔥
🇱🇰 won by 5 wickets 👏🏻#AsiaCupOnStar #AsiaCup2023 #BANvsSL pic.twitter.com/30qVFdcR4K
— Star Sports Tamil (@StarSportsTamil) August 31, 2023
இந்த போட்டியின் ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியின் பௌலியங்கை பாராட்டினாலும் அவர்கள் செய்த சில பீல்டிங் கேலிக்கு உள்ளானது. அந்த வகையில் அசலங்கா 49 ரன்கள் இருக்கும்போது ஐம்பதாவது ரன்னை எடுப்பதற்காக அவர் பாலை தட்டி விட்டு ஓடினார். அந்தப் பந்தை வங்கதேச வீரர் எளிதில் பிடித்திருக்க முடியும் ஆனால் அவர் பந்தை தவறவிட்டு பந்தின் பின் தட்டு தடுமாறி ஓடி ஒரு கட்டத்தில் கீழே விழுந்தார். இதனால் அசலங்கா தனது 9வது அரை சதத்தை நிறைவேற்றினார்.