- Advertisement 3-
Homeவிளையாட்டுஇன்னும் ஒண்ணே ஒன்னு தான்.. 100 வது டெஸ்டில் அஸ்வின் கணக்கில் சேர போகும் மைல்கல்..

இன்னும் ஒண்ணே ஒன்னு தான்.. 100 வது டெஸ்டில் அஸ்வின் கணக்கில் சேர போகும் மைல்கல்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, மார்ச் 7ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த இந்த பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தொடர்ந்து காயம் காரணமாக விலகி இருந்த கே எல் ராகுல், கடைசி டெஸ்ட் போட்டியிலும் இதனால் இடம்பெறவில்லை.

இந்திய அணி தொடரை வென்றாகி விட்ட போதிலும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்துக்கு வெற்றியை கொடுக்க கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் தெரிகிறது. இளம் வீரர்களை வைத்து அருமையாக காய் நகர்த்தி வெற்றி கண்டு வரும் ரோகித் ஷர்மாவை பாராட்டி வரும் அதே வேளையில் கடைசி டெஸ்ட் போட்டியில் மற்றொரு இந்திய வீரர் பற்றிய விஷயங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப ஆண்டுகளாக மிக முக்கியமான வீரராக இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சமீபத்தில் 500 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் கடந்து பல சாதனைகளையும் புரிந்திருந்த நிலையில் அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். அணில் கும்ப்ளே உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் பந்து வீச்சு சாதனைகளை உடைக்கும் நோக்கிலும் அவர் பவுலிங் செய்து வரும் நிலையில் தரம்சலாவில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டி அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் அவர் உடைக்க உள்ள மிக முக்கியமான சாதனை ஒன்றை பற்றி தற்போது காணலாம். இதுவரை டெஸ்ட் போட்டியில் ஐந்து முறை 35 தடவை 5 விக்கெட்டுகளையும், எட்டு முறை பத்து விக்கெட்டுகளையும் அஸ்வின் கைப்பற்றியுள்ளார். அவரை போலவே, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவானான அணில் கும்ப்ளே, இதே போல 35 முறை 5 விக்கெட்டுகளை, 8 முறை பத்து விக்கெட்டுகளை ஒரு டெஸ்டில் எடுத்துள்ளார்.

- Advertisement 2-

இந்த இரண்டு விஷயத்திலும் கும்ப்ளேவை முன்னேறி, அவரது நூறாவது டெஸ்டில் இந்த சாதனைக்கு சொந்தக்காரராகும் வாய்ப்பு அஸ்வினுக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது. நூறாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் எடுத்து மொத்தமாக 10 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில், தனது மகுடத்தில் மற்றொரு மைல்கல்லையும் அஸ்வின் பதிப்பார் என தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் அணில் கும்பளே 132 போட்டிகளில் உருவாக்கிய சாதனையை 100 வது டெஸ்டிலயே படைக்கும் வாய்ப்பும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்