- Advertisement 3-
Homeவிளையாட்டுஅஸ்வினின் முதல் டெஸ்ட், 100 வது டெஸ்ட்.. யாருமே நெருங்காத சாதனைக்கு பின் மெய்சிலிர்க்க வைக்கும்...

அஸ்வினின் முதல் டெஸ்ட், 100 வது டெஸ்ட்.. யாருமே நெருங்காத சாதனைக்கு பின் மெய்சிலிர்க்க வைக்கும் ஒற்றுமை..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒவ்வொரு காலத்திலும் ஒரு கிரிக்கெட் வீரர் மிக முக்கியமான பங்களிப்பை அளித்து அதன் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பார். அப்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம் முந்தைய காலங்களில் ராகுல் டிராவிட், லட்சுமண், அணில் கும்ப்ளே என பலரது பெயரை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகள் படைத்து முன்னணி பந்து வீச்சாளராகவும் இருந்து வருபவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின்.

தமிழகத்தை சேர்ந்த இவர் முதல் தரப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் ஆடி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் பந்து வீசும் விதத்தை அடிப்பதற்கு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை கடந்திருந்த அஸ்வின் வார்னே, முத்தையா முரளிதரன், அணில் கும்ப்ளே என டெஸ்ட் உலகின் சுழல் ஜாம்பவான்கள் பலர் செய்யாத முடியாத சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருந்தார். இன்னும் சில ஆண்டுகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பட்சத்தில் பல முக்கியமான சாதனைகளுக்கும் சொந்தக்காரராக இருப்பார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் அஸ்வினுடைய முதல் டெஸ்ட் போட்டிக்கும், சமீபத்தில் நடந்த நூறாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே உள்ள ஒற்றுமை தொடர்பான செய்தி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement 2-

கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் வைத்து நடந்த தனது முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி இருந்தார். தனது அறிமுக டெஸ்டில் அனைவரையும் அசர வைத்திருந்த அஸ்வின் மொத்தம் 128 ரன்கள் கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதே போல, அஸ்வினின் 100 வது டெஸ்டிலும் கூட மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்த அஸ்வின் 128 ரன்களையும் கொடுத்திருந்தார். முதல் மற்றும் நூறாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ள அஸ்வினுக்கு இந்த இரண்டு போட்டிகளுக்கு இடையே உள்ளான ஒற்றுமையும் தற்போது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

சற்று முன்