- Advertisement 3-
Homeவிளையாட்டுபேட்ஸ்மேன்களின் மூளையில் நுழைந்து விளையாடுகிறார் அஸ்வின்.. அனில் கும்ப்ளே பாராட்டு

பேட்ஸ்மேன்களின் மூளையில் நுழைந்து விளையாடுகிறார் அஸ்வின்.. அனில் கும்ப்ளே பாராட்டு

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதற்கு இங்கிலாந்து சூழல் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த முடிவே இந்திய அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்துவிட்டது. இதனால் ரோகித் சர்மாவை ரசிகர்கள் கடுமையான விமர்சித்தனர்.

இதன்பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. அதற்கு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இமாலய சதமும், அஸ்வினின் சாதனை பந்துவீச்சுமே காரணமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் மூலம் 8 முறையாக ஒரே டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல் அதிகமுறை 10 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையையும் சமன் செய்தார். அதுமட்டுமல்லாமல் 34வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அஸ்வினை பாராட்டி வருகின்றனர். அஸ்வினின் சிறப்பான கம்பேக் என்று வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டி தள்ளியுள்ளார். அனில் கும்ப்ளே கூறும்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பந்துவீச்சாளராக மட்டும் செயல்படுவதில்லை.

- Advertisement 2-

அவர் பேட்ஸ்மேன்களின் மூளையோடு விளையாடுகிறார். அதற்கு திறமை மட்டும் போதாது. பேட்ஸ்மேன்களின் மூளையில் அழுத்தத்தை கொடுத்துவிடுகிறார். அஸ்வினை எதிர்கொண்டு வரும் அத்தனை பேட்ஸ்மேன்களின் உடல் மொழியிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது. இது சாதாரண விஷயமல்ல.

தேஜ்நரேன் சந்தர்பாலுக்கு கிரீஸில் இருந்து கொஞ்சம் விலகி வந்து பந்துவீசுகிறார். இதனால் பேட்ஸ்மேன் பந்து கால்களை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அஸ்வினோ பந்தை டிரிஃபிட் செய்து ஆஃப் ஸ்டம்பை தகர்க்கிறார். பேட்ஸ்மேன்களின் மூளையுடன் விளையாடுவது என்பது இதுதான். பேட்ஸ்மேன்களை குழப்பி அவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதில் கில்லாடியாக இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார்.

சற்று முன்