- Advertisement 3-
Homeவிளையாட்டு611 நாட்கள் கழித்து அம்பயரே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்கு வித்தியாசமான முறையில் அஸ்வினுக்கு கிடைத்த லக்கி...

611 நாட்கள் கழித்து அம்பயரே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்கு வித்தியாசமான முறையில் அஸ்வினுக்கு கிடைத்த லக்கி விக்கெட்.

- Advertisement 1-

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதன்படி மொஹாலியில் நடைபெற்ற இந்த முதலாவது போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது.

அதோடு வெறும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்று இருந்தாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 276 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது. பின்னர் 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக நீண்ட இடைவெளிக்கு பின்னர் களமிறங்க தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓவர் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து அவர் சொந்த மண்ணில் முதல் முறையாக 10 ஓவரையும் வீசி 50 ரன்களுக்குள் விட்டுக் கொடுத்து சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார்.

- Advertisement 2-

அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 611 நாட்கள் கழித்து இன்று அவர் முதல் முறையாக விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதிலும் குறிப்பாக மார்னஸ் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்திய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏனெனில் அஸ்வினின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்த லாபுஷேன் அந்த பந்தை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை. அப்போது பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பரின் கைக்கு சென்றது. ஆனால் அதனை ராகுல் பிடிக்க தவறினார். இருப்பினும் ராகுலின் கையில் பட்ட பந்து ஸ்டம்பில் அடித்தது. இதன் காரணமாக லாபுஷேன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்