- Advertisement 3-
Homeவிளையாட்டுமீண்டும் மீண்டுமா.. அஸ்வினால் கோபத்தில் வார்த்தைகளை விட்ட ஜடேஜா, ரோஹித்.. இதெல்லாம் நியாயமா..

மீண்டும் மீண்டுமா.. அஸ்வினால் கோபத்தில் வார்த்தைகளை விட்ட ஜடேஜா, ரோஹித்.. இதெல்லாம் நியாயமா..

- Advertisement 1-

முதல் இரண்டு நாட்களில் போட்டியை இந்திய அணி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்கு இந்திய அணி காலி செய்திருந்தனர். ஆரம்பத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு கைகொடுக்காமல் போனாலும், பின்னர் பிட்ச்சும் ஒத்துழைப்பு கொடுக்க அவர்கள் கச்சிதமாக அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களின் முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய அணி, 436 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் 80 ரன்களுக்கு மேல் அடித்திருந்த போதிலும் அவர்களால் அதனை சதமாய் மாற்ற முடியாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்திருந்தனர். இருந்தும் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை வகிக்க, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இங்கிலாந்து அணி.

அதிக ரன்கள் அவர் பின்தங்கி இருந்ததால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து அணியை சாய்த்து விடலாம் என்று தான் அந்த அணி கருதி இருக்கும். ஆனால், 3 ஆம் நாள் ஆட்டத்தில் அனைத்துமே தலைகீழாக மாறி இருந்தது.

163 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்து தவித்த சூழலில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக தெரிந்தது. ஆனால் இதன் பின்னர் கைகோர்த்த ஓல்லி போப் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதிலும் சவால் மிகுந்த இந்திய பிட்ச்சில் தனியாளாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா, அக்சர் படேல், சிராஜ் என அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் போப் தண்ணி காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement 2-

இந்திய மண்ணில் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து போப் சாதனை புரிய, 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகிறது. ஒல்லி போப் 148 ரன்களுடன் அவுட்டாகாமல் நிற்க, 126 ரன்கள் முன்னிலையும் வகித்துள்ளனர்.

இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என கருதிய போட்டியை தனியொரு ஆளாக திறம்பட கையாண்டதுடன் இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பை உருவாக்கும் பாதையிலும் ஈடுபட்டு வருகிறார் போப். இந்த நிலையில், 2 வது இன்னிங்சில் இந்திய அணி ஃபீல்டிங் செய்த போது அஸ்வின் மீது ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோர் கோபப்பட்டது தொடர்பான செய்தி அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜடேஜாவின் பந்தினை இரண்டு முறை பவுண்டரி நோக்கி அடித்திருந்தார் ஒல்லி போப். இதில் முதல் பந்து அஸ்வின் நின்ற பகுதிக்கு செல்ல, பந்தை பவுண்டரி லைனுக்கு அருகே அவர் பிடிக்க முயன்றார். ஆனால் அவரது கையில் இருந்து நழுவி பவுண்டரிக்கு சென்றது பந்து. இதே போல, மற்றொரு முறை அஸ்வின் மற்றும் ராஜத் படிதார் ஆகியோர் பவுண்டரி லைன் அருகே பந்தை பிடிக்க செல்ல, மற்றொருவரை நம்பி இருவரும் பந்தை தடுக்காமல் விட்டனர். அந்த பந்தும் பவுண்டரி சென்றதால் பவுலர் ஜடேஜா சற்று ஆவேசம் அடைந்ததாக தெரிகிறது.

பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின், இப்படி இரண்டு முறை ஃபீல்டிங்கில் சொதப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்