- Advertisement -
Homeவிளையாட்டுவருங்காலத்துல அந்த 2 பசங்களும் இந்தியாவோட தூணா இருப்பாங்க.. பெருமையா இருக்கு.. அஸ்வின் கைகாட்டிய வீரர்கள்..

வருங்காலத்துல அந்த 2 பசங்களும் இந்தியாவோட தூணா இருப்பாங்க.. பெருமையா இருக்கு.. அஸ்வின் கைகாட்டிய வீரர்கள்..

- Advertisement-

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல சர்வதேச அணிகளை தவிர இந்திய அணி ஒரு விஷயத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. மற்ற அணிகளை விட சமீப காலமாக இந்திய அணியில் தான் இளம் வீரர்கள் அதிகமாக இடம்பிடித்து ஆடி வருகின்றனர். வெறுமென ஒரு சில போட்டிகளில் மட்டும் இவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க, தொடர்ந்து இந்திய அணியின் வருங்காலத்திற்கான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அளவில் நிறைய முதல் தர கிரிக்கெட் போட்டிள் தொடர்ச்சியாக நடந்து வருவதால் பல இளம் வீரர்களும் சவாலான தருணங்களை கூட உணர்ந்து ஆடி வருகின்றனர். இதனால், சர்வதேச அரங்கில் வரும் போது வெளிநாட்டு மண்ணாக இருந்தால் கூட அந்த சூழலை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சமீப காலமாக இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த இளம் வீரர்களாக இருப்பவர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர். இவர்கள் இருவருமே சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். முதல் டெஸ்டில் கில் சதமடித்திருந்தார். மேலும், ஜெய்ஸ்வால் தான் ஆடிய நான்கு இன்னிங்ஸ்களில் மூன்றில் அரை சதத்தை கடந்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளிலும் இளம் வீரர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்திய அணிக்கு நிச்சயம் இது பெரிய சாதகமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. இதனிடையே, கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை பாராட்டி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

“இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொருத்தவரையில் அவர் மிக ஸ்பெஷல் திறனை பெற்று சுதந்திரமாக ஆடக்கூடிய வீரர் என்றே நான் நினைக்கிறேன். கில் மற்றும் ஜெயஸ்வால் ஆகிய இருவருமே ஏறக்குறைய அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர்கள். இவர்கள் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரையில் தங்களின் ஆரம்ப காலத்தில் இருக்கிறார்கள் என சொல்லலாம்.

ஆனால் அதே நேரத்தில் நிச்சயம் வருங்கால இந்திய அணியின் தூண்களாக வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் போட்டிகளில் இருப்பார்கள் என்று கருதுகிறேன். கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் டெஸ்ட் பயணத்தில் அவர்களின் அனுபவம் மெல்ல மெல்ல மேம்பட்டு வருவதுடன் இருவரும் ஸ்பெஷலான வீரர்களாக இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

என்னை பொருத்தவரையில் இன்னும் நிறைய போட்டிகளில் நிறைய அனுபவங்களை கற்று தேர்ந்து கொண்டு எந்த விஷயங்களில் எல்லாம் இன்னும் அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை அவர்கள் இருவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் இருவருமே தரமான கிரிக்கெட் ஆடுவதற்கு சிறந்த ஆதாரமாகவும் விளங்கி வருகிறார்கள்” என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி உள்ளார்.

சற்று முன்