- Advertisement 3-
Homeவிளையாட்டுபையன் ஆஸ்திரேலிய வீரர் மாதிரி ஆடறாப்ல.. சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை.. உ.கோல இவர செலக்ட்...

பையன் ஆஸ்திரேலிய வீரர் மாதிரி ஆடறாப்ல.. சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை.. உ.கோல இவர செலக்ட் பண்ணுங்க – அஸ்வின்

- Advertisement 1-

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. ஆனால் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இன்னும் காயத்திலிருந்தே முழுமையாக குணமடைந்து களமிறங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

அது போக இத்தொடர் துவங்க இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனைகள் என்ற பெயரில் ஏராளமான மாற்றங்களை செய்து வரும் ராகுல் டிராவிட் தரமான இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை என்பதற்கு தேவையான சோதனைகளை செய்து பார்க்காமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை வீரர்கள் தான் அழுத்தமான போட்டிகளில் வெற்றியில் பங்காற்றினார்கள்.

அஸ்வின் ஆலோசனை:
ஆனால் தற்போது இந்திய அணியில் அப்படியே அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா முதல் பாண்டியா வரை டாப் 6 பேருமே வலது கை வீரர்களாக இருப்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுக்க காத்திருக்கிறது என்றால் மிகையாகாது. மறுபுறம் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் நிச்சயம் விளையாட வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கோரிக்கையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் அனைவருமே இடதுகை வீரர்களாக இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அத்துடன் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி சூரியகுமார், சஞ்சு சாம்சன் போன்றவர்களை மிஞ்சும் வகையில் சவாலான பிட்ச்சில் ஆஸ்திரேலிய வீரர்களை போல மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய திலக் வர்மா உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement 2-

இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அரை சதமடித்தார். இருப்பினும் டி20 போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் அவர் 3 – 5 போன்ற இடங்களிலேயே விளையாடுவார். அதே சமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் நல்ல சாதனைகளை வைத்துள்ளார் என்பதை மறக்காதீர்கள்”

“குறிப்பாக பேட்டிங் செய்ய வந்ததுமே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வது அவருடைய ஸ்பெஷலாகும். அந்த வகையில் நல்ல திறமை கொண்ட அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நாமும் விரும்புகிறோம். ஆனால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஏனெனில் தொடக்க வீரர்களாக ரோஹித் – கில் ஆகியோரும் 3வது இடத்தில் விராட் கோலியும் விளையாடுவார்கள் என்ற நிலைமையில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் ஆகியோர் ஃபிட்டாகி விளையாடுவார்கள்”

“ஒருவேளை அவர்களில் யாராவது விளையாடாமல் போனால் என்ன செய்வது என்பதாலேயே சஞ்சு சாம்சன் சோதிக்கப்பட்டு வருகிறார். இந்த சமயத்தில் திலக் வர்மாவை அவர்கள் ஒருநாள் அணியில் சேர்ப்பது பற்றி யோசிப்பார்களா? ஏனெனில் வெஸ்ட் இண்டீசில் அவர் விளையாடிய விதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக சவாலான பிட்ச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ரோகித் தர்மா ஸ்டைலை பிரதிபலிக்கும் வகையில் விளையாடினார்”

“ஏனெனில் பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஃபுல் ஷாட் அடிப்பதற்கு தயங்குவார்கள். ஆனால் இயற்கையாகவே ஆஸ்திரேலிய வீரரை போல் ஃபுல் ஷாட் வாயிலாக பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் திறமை அவரிடம் இருக்கிறது. எனவே 7வது இடத்தில் மட்டுமே ஜடேஜா இருக்கும் நிலையில் அவரைப்பற்றி தேர்வு குழுவினர் யோசிப்பார்களா? ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் பார்க்கும் எந்த தேர்வுக்குழு உறுப்பினருக்கும் வாவ் என சொல்ல வைக்கும்” என்று கூறினார்.

சற்று முன்