- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதை நான் எப்போவோ பண்ணி இருக்கனும்... ஆனாலும் பரவாயில்லை... அதுல இருந்த சூட்சும ரகசியம் இது...

இதை நான் எப்போவோ பண்ணி இருக்கனும்… ஆனாலும் பரவாயில்லை… அதுல இருந்த சூட்சும ரகசியம் இது தான் – மனம் திறந்த அஸ்வின்

- Advertisement 1-

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி செப்.24ஆம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். இதில், சுப்மன் கில் 104 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து, களமிறங்கிய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடித்து 52 ரன்களை குவித்தார். தொடர்ந்து இஷான் கிஷான் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து, 400 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பின்னர் மழை காரணமாக 33 ஓவர்களில் 317 எடுக்க ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இந்திய அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. முடிவில், 217 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. இந்த வெற்றிக்கு, இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஸ்பின் பவுலிங் கைகொடுத்தது. தொடர்ந்து , ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே விக்கெட்டை தனது சுழற் பந்து வீச்சால் எப்படி அவுட் ஆக்கினார் என்பது குறித்து ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் அஸ்வின், பிசிசிஐ டிவிக்கு பேட்டி அளித்தார்.

- Advertisement 2-

அதில் அவர் கூறியதாவது, “ நான் போடும் பந்து பேட்ஸ்மெனின் பேட்டில் படாமலும் ஸ்பின் ஆகும் வகையிலும் இருக்க எனது பவுலிங் லெந்த்தை கச்சிதமாக வைத்திருந்தேன். அதற்க்கு முன்பு நான் வீசிய பந்தில் மார்னஸ், ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி இருந்தார். எனவே, அவர் கட்டாயம் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்லாக் ஸ்வீப் ஆடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் ஸ்டம்ப்பை விட்டு ஆடினால் நான் என் வேகத்தை சற்று குறைக்க முடிவு செய்தேன்.

இதனால், அந்த பந்து ஸ்டம்பில் பட்டது. நான் எனது மூன்றாவது விரலை வைத்து கேரம் பால் போட்ட நிலையில் பந்து ஆஃப் பிரேக்கில் ஸ்பின் ஆகி ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட்டை எடுத்தேன். இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும் ஆனால் இப்போது தான் செய்தேன்” என்றார் அஸ்வின்.

சற்று முன்