இந்திய அணி தோல்வி எதிரொலி… கோபத்தோடு சாடிய அஸ்வின்… மனுஷன் இப்படி கூட பேசுவாரா

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் 3 போட்டிகளை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்த நிலையில் பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் நேற்று அஸ்வின் ரவிச்சந்திரன் தனது youtube சேனலில் இந்திய அணியின் தோல்வி குறித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி குறித்தும் தனது கருத்துக்களை கூறியிருந்தார்.

பலரும் இந்திய அணியை சாடி வரும் நிலையில், அஸ்வின் அதற்க்கு நேர்மாறாக இந்திய ரசிகர்களை சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரசிகர்கள் பலருக்கும் நிச்சயம் இது ஏமாற்றமாக தான் இருக்கும். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் உண்மையில் இந்திய அணி தோற்று இருந்தாலும் அந்த அணியில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும். நானும் இளம் வீரராக இருந்தபோது இதுபோல் வெளிநாடுகளில் சென்று விளையாடிய சமயங்களில் பல நல்ல அனுபவங்களை நான் பெற்றேன்.

- Advertisement -

எப்போதுமே வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் போது கிரவுண்டில் இருக்கும் நுணுக்கங்கள் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் வீரர்களை அவர்கள் எளிதில் வீழ்த்தக்கூடும். இது போன்றவற்றை நான் என் சொந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டேன்.

அது போல் இந்தி அணியில் விளையாடிய இளம் வீரர்கள் இந்த தொடரின் மூலம் பல அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஜெய்ஸ்வால் மற்றும் கில் தொடக்க வீரர்களாக சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல் சூரியகுமார் யாதவும் சிறப்பாக ஆடினார்.

- Advertisement -

திலக் வர்மா பேட்டிங்கில் பிரகாசமாக ஜொலித்தார். அதேபோல் கடைசி போட்டியில் தனது பவுலின் திறமையையும் வெளிப்படுத்தினார். இப்படி பல கோணங்களிலும் இந்திய அணிக்கு இது பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. எனினும் இந்திய அணியை சில ட்ரால் செய்கின்றனர். அது போன்ற செயல்களை தவிர்ப்பதே நல்லது. வெஸ்ட் இண்டீஸ் டி 20 உலககோப்பைக்கு குவாலிபை ஆகவில்லை, 50 ஓவர் உலககோப்பைக்கு குவாலிபை ஆகவில்லை என்று சொல்பவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்த தொடர் ஏதோ ஒரு விதத்தில் இந்திய அணிக்கு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. இதை நான் என் அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். அதனால் நெகடிவாக பார்ப்பதை விடுங்கள்.

நிக்கோலஸ் பூரன் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதே பார்மோடு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி சிறப்பாக செயல்பட்டார். உலகக் கோப்பை தொடருக்காக பல அணிகள் தயாராகி வருகிறது. ஆசிய கோப்பை போட்டிகள் துவங்கும் போது தான் உண்மையான சூடு பிடிக்கும். படிப்படியாக பல நாடுகளும் உலகக்கோப்பைக்காக தங்களது வீரர்களை வேகமாக தயார் செய்து வருகிறார்கள். அடுத்த அடுத்த கட்டத்திற்கு வீரர்கள் தங்கள் உடல் தகுதியை வளர்த்துக் கொள்வார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்