- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் இது தான்.. எல்லாம் மாறி போச்சி...

இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் இது தான்.. எல்லாம் மாறி போச்சி – மனம் திறந்த அஸ்வின்

- Advertisement 1-

இந்தியாவில் அடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட அணி ஏற்கனவே தேர்வுக்குழு தலைவர் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோரது மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வின் இடம்பெறாதது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் தற்போது இடம் பிடித்துள்ள ஜடேஜா, குல்தீப், அக்சர் ஆகிய மூவரும் இடது கை சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் வேளையில் அஸ்வின் இடம்பெற வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காதது குறித்து அவரே மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் அசைக்க முடியாத ஒரு தரமான அணியாக இருந்து வந்தது.

அதற்கு காரணம் : பவர் பிளே முடிந்து 5 வீரர்கள் வெளிவட்டத்தில் பீல்டிங் செய்யலாம் என்கிற விதி இருந்தது. இதனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டிக்கு 40-45 ரன்கள் மட்டுமே கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தி வந்தனர்.

- Advertisement 2-

ஆனால் 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு பவர்பிளே முடிந்து வெளி வட்டத்தில் நான்கு பீல்டர்கள் மட்டுமே அனுமதி என்று விதி மாற்றப்பட்டது. இதன் காரணமாக எதிரணியின் ரன் குவிப்பும் 300-320 என்று மாறியது. அதனால் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என்று கொடுத்து வந்த நாங்கள் தற்போது 5 ரன்கள் தாண்டி கொடுத்தோம்.

இப்படி அதிகமாக ரன்கள் வழங்கப்படும் காரணமாகவே என்னை போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்டிங்கிலும் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாகவே மெது மெதுவாக எனது வாய்ப்பு குறைய ஆரம்பித்தது என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்