- Advertisement 3-
Homeவிளையாட்டுடெஸ்டின் பாதியில் வெளியேறிய அஸ்வின்.. 10 பேருடன் ஆடும் இந்திய அணி?.. அவரு குடும்பத்துல என்ன...

டெஸ்டின் பாதியில் வெளியேறிய அஸ்வின்.. 10 பேருடன் ஆடும் இந்திய அணி?.. அவரு குடும்பத்துல என்ன ஆச்சு..

- Advertisement 1-

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் 2 வது டெஸ்ட் போட்டி, மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் அதே வேளையில், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இரு பக்கமும் சார்ந்து போட்டி சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய செய்த இந்திய அணி, 445 ரன்கள் எடுத்துள்ளது.

ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக ஆடிய இந்திய அணியை ரோஹித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சதங்கள் மீட்டெடுத்தது. இதன் பின்னர் சர்ப்ராஸ் கான், ஜூரேல், அஸ்வின், பும்ரா என கடைசி கட்டத்திலும் வீரர்கள் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி நினைத்ததை விட அதிக ரன்களை தங்கள் பக்கம் சேர்த்திருந்தது.

445 என்பது சற்று கடினமான ரன்னாக இருந்ததால், இதை இங்கிலாந்து அணி தொடுவதற்கே சிரமப்படும் என்று தான் கருதப்பட்டது. ஆனால் தற்போது இங்கிலாந்து அணி ஆடி வரும் ஆட்டத்திற்கு எளிதாக இதனை கடந்து செல்வார்கள் என இந்திய ரசிகர்களுக்கே ஒருவித அச்சம் தோன்றி விட்டது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கட், ஒரு நாள் மற்றும் டி 20 போல அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருகிறார்.

இவர் இரண்டாம் நாள் முடிவில் அவுட் ஆகாமல், 133 ரன்களுடன் ஆடி வரும் நிலையில், இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இங்கிலாந்து, 200 ரன்களுக்கு மேல் சேர்த்து விட்டது. 3 நாட்கள் மீதம் இருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி தெரியாத அளவுக்கு போட்டி அசத்தலான போக்கில் உள்ளது.

- Advertisement 2-

தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியம் என்ற நிலையில், அவர்கள் கண்டிப்பாக மாறி மாறி வெற்றிக்காக மல்லுக்கட்டுவார்கள் என்றே தெரிகிறது. இதனிடையே, இதுவரை நடக்காத அளவுக்கு ஒரு சம்பவம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்திய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளர் அஸ்வின், கிரவுலி விக்கெட்டை எடுத்து டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி உள்ளார்.

இந்த நிலையில் தான், திடீரென இந்த போட்டியின் பாதியிலேயே அவர் விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தில் ஏதோ மெடிக்கல் எமர்ஜன்சி இருப்பதன் காரணமாக, ஒரு போட்டிக்கு நடுவே விலகும் சூழலும் உருவாகி உள்ளதாக தெரிகிறது. எந்த டெஸ்டிலும் ஒரு வீரர் இப்படி குடும்ப காரணத்திற்காக பாதியில் கிளம்பாத நிலையில், அவரது குடும்பத்தில் ஏதோ சற்று சீரியஸான சூழல் தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் பயத்தில் உள்ளனர்.

அதே போல, இந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள 3 நாட்களில் இந்திய அணி 10 வீரர்களுடன் தான் களமிறங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

சற்று முன்