- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே அணியின் துரோகி... தோனி இல்லாட்டி இவருக்கு வாய்ப்பே இல்ல.. அஸ்வின் குறித்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்...

சிஎஸ்கே அணியின் துரோகி… தோனி இல்லாட்டி இவருக்கு வாய்ப்பே இல்ல.. அஸ்வின் குறித்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிரடி குற்றச்சாட்டு

- Advertisement 1-

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் குறித்து முன்னாள் இந்திய வீரரான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நேற்றிலிருந்து பல சர்ச்சைக்குரிய விடயங்களை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக அஸ்வின் மீது அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் இருந்தும் அஸ்வின் அந்த அணியின் நிர்வாகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் முன்வைத்துள்ள ஒரு பதிவு தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சிஎஸ்கே அணியின் உரிமையாளரான சீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்தபோது தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரின் உதவியால் மட்டுமே அஸ்வின் இந்திய அணியில் நுழைந்ததாகவும் அவர்கள் இல்லை என்றால் அவரால் இந்திய அணியில் நுழைந்திருக்க முடியாது என்றும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் இரண்டும் அஸ்வினை ஆதரித்த வேளையில் சிஎஸ்கே அணிக்கு துரோகம் செய்யும் வகையில் அஸ்வின் ஒரு செயலை செய்ததாக லக்ஷ்மணன் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சிஎஸ்கே-வின் சொந்த குழுமமான இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனியை விட்டு அதன் எதிரியான கெம்பிளாஸ்டில் அஸ்வின் சேர்ந்ததாகவும், இத்தனை பெரிய மனதுள்ள மனிதருக்கு கோவில் தான் கட்ட வேண்டும் என்றும், அவருக்கு எத்தனை விஸ்வாசம் என்றும் அஸ்வினை அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement 2-

2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தொடர்ச்சியாக இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் விளையாடி வந்த அஸ்வின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகு கொஞ்சம் கூட விஸ்வாசம் இல்லாமல் வேறு கம்பெனிக்கு மாறிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்து அஸ்வின் மீது லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் குற்றச்சாட்டுகளை வைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதுகுறித்து அஸ்வின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை. உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இப்படி அடுத்தடுத்து அஸ்வின் குறித்து குறை கூறி வருவது ஏன் என்று புரியாமல் ரசிகர்களும் குழம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்