Homeகிரிக்கெட்ஏசியன் கேம்ஸ் : ருதுராஜ் தலைமையிலான வலுவான 11 பேர் கொண்ட இந்திய அணியின் உத்தேச...

ஏசியன் கேம்ஸ் : ருதுராஜ் தலைமையிலான வலுவான 11 பேர் கொண்ட இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ

-Advertisement-

சீன நாட்டில் தற்போது ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளானது கோலாகமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்தியா 50 பதக்கங்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் வேளையில் 13 தங்கப்பதக்களையும் கைப்பற்றி உள்ளது. அதில் ஒரு தங்க பதக்கத்தை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றி தந்துள்ளது.

அதனை தொடர்ந்து முதன்முறையாக ஆடவர் கிரிக்கெட் அணியானது ஏசியன் கேம்ஸ் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

-Advertisement-

ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் இந்த ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வழி நடத்துவார் என்றும் அவரது தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஏசியன் கேம்ஸ் தொடரின் காலிறுதி போட்டிகளில் விளையாட இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் நேரடியாக தகுதிபெற்றிருந்தன. இந்நிலையில் இந்த ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையின் படி நாளை அக்டோபர் 3-ஆம் தேதி இந்திய அணி நேபாள் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

-Advertisement-

இந்நிலையில் நாளைய இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருந்தால் வலுவாக இருக்கும் என்பதை வைத்து நாங்கள் இங்கே உத்தேச பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் ஸ்ட்ராங் பிளேயிங் லெவன் இதோ :

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) திலக் வர்மா, 4) ஷிவம் துபே, 5) ரிங்கு சிங்ம் 6) ஜிதேஷ் சர்மா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ரவி பிஷ்னாய், 9) ஆவேஷ் கான், 10) அர்ஷ்தீப் சிங், 11) ஆகாஷ் தீப்.

-Advertisement-

சற்று முன்