Homeகிரிக்கெட்AUS vs NED : 3 பேர் 0 ரன்.. 6 பேர் 15 ரன்...

AUS vs NED : 3 பேர் 0 ரன்.. 6 பேர் 15 ரன் கூட தாண்டவில்லை… தெறிக்கவிட்ட மிட்செல் ஸ்டார்க். தடுமாறி நின்ற நெதர்லாந்து.. நடந்தது என்ன?

-Advertisement-

உலகக் கோப்பைக்காண பயிற்சி போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருந்த பயிற்சி போட்டி மழையின் காரணமாக ரத்தானது. அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று பயிற்சி போட்டியில் ஈடுபட்டனர். அந்த போட்டியின் ஓவர்கள் மழையின் காரணமாக 23 ஆக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிப்பது. எப்பொழுதும் போல் அல்லாமல் இந்த முறை ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் வீரர்களா ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

-Advertisement-

இதில் ஜோஷ் இங்கிலிஸ் பூஜ்ஜியம் ரன்களுக்கு வெளியேற அது அந்த அணிக்கு ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை கொடுத்தது. எனினும் அடுத்து வந்த வீரரான அலெக்ஸ் கேரி ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். ஸ்டீவன் ஸ்மித் 55, அலெக்ஸ் கேரி 28, கிளென் மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 34, மிட்செல் ஸ்டார்க் 24*, பாட் கம்மின்ஸ் 1, மத்தேயு ஷார்ட் 5, மார்னஸ் லாபுசாக்னே 3*. இப்படியாக 23 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 166 ரன்கள் சேர்த்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார் மிட்செல் ஸ்டார்க். உலகக் கோப்பை போட்டியில் தன்னுடைய பவுலிங் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதற்கு ஒரு சாம்பிள் காட்டுவது போல் ஆரம்பத்திலேயே அவர் ஆட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

-Advertisement-

இதன் காரணமாக மேக்ஸ் ஓ’டவுட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீடே ஆகிய மூவரும் பூஜ்ஜியம் ரன்களுக்கு வெளியேறினர். அதேபோல் தொடக்க வீரரான விக்ரம்ஜித் சிங் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, கொலின் அக்கர்மேன் மட்டும் நிலையாக நின்று ஆடிக்கொண்டிருந்தார்.

ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் மல மலவென சரிந்த வண்ணமே இருந்தன. சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 9 ரண்களும் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களும் எடுத்து வெளியேற, லோகன் வான் பீக் 9 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் 14.2 ஓவர்கள் முடிந்த சமயத்தில் மழை பெய்ய துவங்கி. அது தீவிரமடைந்த காரணத்தினால் இந்த போட்டி ரத்தானது. அந்த சமயத்தில் நெதர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணியை பொறுத்தவரை, அவுட் ஆன ஆறு வீரர்களும் 15 ரன்கள் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

-Advertisement-

சற்று முன்