உலகக்கோப்பைக்காக பல்வேறு அணிகள் பயிற்சி போட்டியில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்றுடன் அந்த பயிற்சி போட்டிகள் அனைத்தும் முடிவுற்றன. நேற்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த பயிற்சி போட்டியானது மழை காரணமாக ரத்தானது.
அதே சமயம் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி திட்டமிட்டபடி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை களம் இறங்கிய அத்தனை வீரர்களுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஓபனிங் வீரரான டேவிட் வார்னர் 33 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, மற்றொரு ஓப்பனிங் வீரரான மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத்தார்.
ஸ்டீவன் ஸ்மித் 27, மார்னஸ் லாபுசாக்னே 40,அலெக்ஸ் கேரி 11, கிளென் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50, ஜோஷ் இங்கிலிஸ் 48, பாட் கம்மின்ஸ் 2 என 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணில் 351 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணிக்கு மெகா இலக்கை நிர்ணயித்தது.
இலக்கை துரத்தும் முனைப்போடு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் சற்று சரியாக அமையவில்லை. அந்த அணியின் துவக்கு வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கனர். ஃபகார் ஜமான் 22 ரன்களிலும் இமாம்-உல்-ஹக் 16 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
அதனை தொடர்ந்து வந்த அப்துல்லா ஷபீக் 12 ரன்களில் அவுட் ஆக பாகிஸ்தான அணி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையிலே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் அடுத்து வந்த இப்திகார் அகமது
85 பந்துகளில் 83 ரன்கள் விளாசி அந்த அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேபோல் பாபர் அசாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாபர் அசாம் 59 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரிட்டயட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் அவர் தனது 3வது இடத்தை விட்டுக்கொடுத்து மட்டும் அல்லாமல் எளிதாக சதம் அடிக்க வேண்டிய சூழல் இருந்த போதும் மற்ற வீரர்களின் ஆட்டத்தை சோதிப்பதற்காக 90 ரன்கள் இருந்த போது பெவிலியன் திரும்பியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
எனினும் மற்றொரு புறம் நிதாமனாக ஆடிய முகமது நவாஸ் 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் ஸ்கோர் படிப்படியாக உயர துவங்கியது. எனினும் அந்த அணி 47.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே குவித்தது.
ஆஸ்திரேலியாவின் பவுலங்கை பொறுத்த வரை நேற்று கிட்டத்தட்ட 23 ஓவர்களை அந்த அணியின் பார்ட் டைம் பவுலர்களான ஸ்மித், வார்னர் போன்றோர் வீசினர். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியால் மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க முடிந்தது.
மீண்டும் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் வந்து பந்தை வீசத் துவங்கியதும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் மல மல மீண்டும் சரியத் தொடங்கியது. இதன் காரணமாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்தது