தென் ஆப்பிரிக்காவிற்கு சற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை விளையாடி வருகிறது. உலகக்கோப்பை நெருங்கி வரும் இந்த வேலையில் இந்த தொடரானது மிக சிறந்த ஒரு பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி நல்ல ஒரு நிலையில் இருந்தது. ஆனால் நேற்று நடந்த மூன்றாவது போட்டியானது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானிக்க, தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்ய துவங்கியது.
அந்த அணியின் துவக்க ஜோடியான குவின்டன் டி கொக் மற்றும் தெம்ப பவுமா மிக சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான வலுவான ஒரு அடித்தளத்தை உருவாக்கினர். குயின்டன் டி காக் 77 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். இதில் 2 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடக்கம். அதே போல டெம்பா பவுமா 62 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்கள் அடித்தார்.
இந்த இருவரது பார்ட்னெர்ஷிப்பில் 146 ரன்கள் சேர்ந்தது. 22.5 ஓவரில் முதல் விக்கெட் விழ, அடுத்து வந்த வீரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் 39 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்து வந்த ஐடன் மார்க்ராம் 74 பந்துகளில் 102 ரன்கள் விலாச அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் அடுத்ததுது வந்த வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்க வில்லை.
50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் அட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல ஒரு துவக்கம் இருந்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்களால் தென் ஆப்ரிக்க பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை.
துவக்க வீரரான டேவிட் வார்னர் 56 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் எடுக்க, மிட்செல் மார்ஷ் 29 ரன்களில் வெளியேறினார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் யாரும் 16 ரன்னை கூட தாண்டவில்லை. 34.3 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 227 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி மூன்றாவது போட்டியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. அடுத்து 2 போட்டிகள் உள்ள நிலையில், அதில் ஒன்றை வென்றால் கூட ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றும்.