AUS vs SA: 20 ரன் கூட தாண்டாத 8 பேர். 34.1 ஒரு ஓவரில் சுருண்ட அணி.. சோலியை முடித்த 2 பவுலர்கள் – நடந்தது என்ன?

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி அங்கு டி20 மற்றும் ஒரு நாள் தொடரை விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில் ஒரு நாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கியது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் ஐடன் மார்க்ராம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

ஜோ ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதன் காரணமாக பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு ஆரம்பித்தது.

இதில் துவக்க வீரரான குயின்டன் டி காக் 39 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரரான டெம்பா பவுமா பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினார். ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்து வந்த தென்னாபிரிக்க வீரர்கள் ஸ்கோரை உயர்த்தும் வகையில் விளையாடினர்.

- Advertisement -

ராஸ்ஸி வான் டெர் டுசென் 30, ஐடன் மார்க்ராம் 93, ஹென்ரிச் கிளாசென் 6, டேவிட் மில்லர் 63, மார்கோ ஜான்சன் 47, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 38, ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ் மற்றும் லுங்கி என்கிடி 0 என ஐம்பது ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரைஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளும், சீன் அபோட் 2 விக்கெட்டுகளும், சேர்ந்து , டிம் டேவிட், நாதன் எல்லிஸ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலியா அணியின் துவக்கம் சிறப்பாக இருந்தது.

மிட்செல் மார்ஷ் 56 பந்துகளில் 71 ரன்கள் விலாசினார். டேவிட் வார்னர் 10, ஜோஷ் இங்கிலிஸ் 0, மார்னஸ் லாபுசாக்னே 44, அலெக்ஸ் கேரி 2, கேமரூன் கிரீன் 18, டிம் டேவிட் ஒன்று, சீன் அபோட் 23, மைக்கேல் நெசர் 0, நாதன் எல்லிஸ் 9, ஆடம் ஜம்பா 5, இப்படியாக 34.1 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா அணி குதித்தது.

இதில் 8 வீரர்கள் 20 ரன்களை கூட தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் போலிங்கை பொறுத்த வரை மார்கோ ஜான்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் கேசவ் மகாராஜ் நான்கு விக்கெட்டுகளும், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஒரு விக்கட்டையும் விழித்தனர். இந்த போட்டியின் வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது.

இதில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான குயின்டன் டி காக் இந்த உலகக் கோப்பையோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தன் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி ஒரு நாள் போட்டி இதுவாகும். அதில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருப்பது நிச்சயம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

சற்று முன்