- Advertisement -
Homeவிளையாட்டுஇந்த டெஸ்ட் போட்டியில கோலியோட ஆட்டம் அவ்ளோ சூப்பராலாம் இருக்கப்போறதில்ல - போட்டிக்கு முன்பு வாய்பேசும்...

இந்த டெஸ்ட் போட்டியில கோலியோட ஆட்டம் அவ்ளோ சூப்பராலாம் இருக்கப்போறதில்ல – போட்டிக்கு முன்பு வாய்பேசும் மார்னஸ் லபுஷேன்

- Advertisement-

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கோலி கேப்டனாக இருந்த போது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக வழிநடத்தி பெருமை சேர்த்தார். அவர் தலைமையில் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

இந்நிலையில் இப்போது இரண்டாவது முறையாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸி அணியை எதிர்கொள்கிறது. இப்போது கோலி இந்திய அணியின் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே உள்ளார். இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி ஜூன் 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ஐசிசி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. அதில் ஆஸி வீரர்கள் கோலி பற்றி தங்களுடைய கருத்துக்களை கூறியுள்ளனர். பலரும் கோலி குறித்து சிறப்பான கருத்துக்ளை கூறி இருந்தாலும், மார்னஸ் லபுஷேனின் கருத்து கோலியை அக்ரோசாப்டுத்தும் வகையில் உள்ளது.

அந்த வகையில் ஆஸி வீரர்கள் கூறிய கருத்துக்களை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம். வீடியோவில் முதலில் தோன்றும் ஆஸி அணியின் கேமரூன் க்ரீன் “கோலி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கான சிறந்த வீரராக உள்ளார். அவர் அணியை கடந்த ஒரு தசாப்தமாக வழிநடத்தி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

- Advertisement-

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் “நம்ப முடியாத கவர் ட்ரைவ்” என கோலியின் ட்ரேட் மார்க் ஷாட்டை புகழ்ந்துள்ளார். அவரை போலவே ஒரு வார்த்தையில் கோலியை “போட்டியாளர்” என புகழ்ந்துள்ளார் உஸ்மான் கவாஜா.ஆஸி அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், கோலி பத்தி பேசும் போது “சிறந்த வீரர். எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பார். திறமையான ஆதிக்கம் செலுத்தும் ஒரு நபர். இந்திய நடுவரிசை பேட்டிங்கின் முதுகெலும்பு” என வர்ணித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் கோலி பற்றி கூறுகையில் “கண்டிப்பாக நீண்ட நாட்களாக அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்” எனக் கூறியுள்ளார். அதே போல நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷேன் “மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர். மூன்று வடிவத்துக்குமான வீரர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி உள்ளார் ஆனால் இந்த வாரம் அவர் சிறந்த வீரராக இருக்கமாட்டார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்