- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித்துக்கு நடந்ததே தான்.. விடாமல் இந்திய ரசிகர்களை துரத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்..

ரோஹித்துக்கு நடந்ததே தான்.. விடாமல் இந்திய ரசிகர்களை துரத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்..

- Advertisement 1-

கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த U 19 உலக கோப்பைத் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தது. முன்னதாக, லீக் சுற்றில் வங்காளதேசம், அயர்லாந்து, UAE ஆகிய அணிகளை தோற்கடித்திருந்த இந்திய அணி, சூப்பர் சிக்சில் நியூசிலாந்து மற்றும் நேபாளம் அணிகளை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது.

தென்னாப்பிரிக்க அணியை இந்தியா அரையிறுதியில் எதிர்கொண்டதால், சற்று சவால் நிறைந்ததாகவே இந்த போட்டி அமைந்திருந்தது. அனால், அதையும் கடந்து இறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது இந்திய அணி. மறுபக்கம், ஆஸ்திரேலிய அணியும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒரு போட்டியில் மட்டும் முடிவு கிடைக்கப்படவில்லை.

இப்படி இந்த உலக கோப்பைத் தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த இரு அணிகள், இறுதி போட்டிக்கு முன்னேறியது முதலே அவர்கள் மீது எதிர்பார்ப்பும், யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியை இரண்டு முறை U 19 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் சந்தித்திருந்த இந்திய அணி, இரண்டிலும் வென்று கோப்பையை வென்றிருந்தது. அதனை ஹாட்ரிக் ஆக மாற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.

இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் இந்த தொடர் முழுக்க சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததால் இந்த முறையும் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் இறுதி போட்டிக்காக காத்திருந்தனர். அந்த வகையில், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியில் அனைவருமே சிறப்பான பங்கை ஆற்ற 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement 2-

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஆதர்ஷ் சிங் மற்றும் முருகன் அபிஷேக் ஆகியோர் மட்டும் 40 ரன்களைத் தாண்ட மற்ற எந்த வீரர்களும் ரன் சேர்க்கவில்லை. சச்சின் தாஸ் மற்றும் உதய சஹாரன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாக, இந்திய அணி தோல்வி பாதையை நோக்கி சென்றது.

இதனால், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அச்சுறுத்தலாக விளங்கிய ஆஸ்திரேலிய அணி, 79 ரன்கள் வித்தியாசத்தில் U 19 உலக கோப்பையை சொந்தமாக்கியது. முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டி என இரண்டிலுமே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் தான் மோதி இருந்தது.

இந்த இரண்டிலுமே ரோஹித் தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்ததால், U 19 உலக கோப்பையின் இறுதி போட்டியில் அதற்கு தக்க பதிலடியை இந்திய இளங்கன்றுகள் கொடுக்கும் என்றே ரசிகர்கள் கருதினர். ஆனால், அதிலும் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது, இந்திய ரசிகர்களை மனமுடைய வைத்துள்ளது.

சற்று முன்