- Advertisement 3-
Homeவிளையாட்டுமாட்டிகிட்டே பங்கு.. இங்கிலாந்த வெளிய அனுப்ப ஆஸ்திரேலியா பாத்த வேலை.. ஆனாலும் ஜெயிச்சது எப்படி தெரியுமா..

மாட்டிகிட்டே பங்கு.. இங்கிலாந்த வெளிய அனுப்ப ஆஸ்திரேலியா பாத்த வேலை.. ஆனாலும் ஜெயிச்சது எப்படி தெரியுமா..

- Advertisement 1-

தற்போது நடைபெற்று வரும் டி 20 உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக மாறியிருந்தது ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் மோதிய போட்டி. இந்த இரண்டு அணிகளுடன் இங்கிலாந்து அணியும் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தது. முன்னதாக இங்கிலாந்து அணி தங்களின் கடைசி லீக் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கி இருந்தது.

மழை காரணமாக போட்டியே தாமதமாகி கொண்டிருக்க, இங்கிலாந்து அணியின் சூப்பர் 8 வாய்ப்பும் குறைந்து கொண்டே இருந்ததால் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட சிலர் கண்ணீர் வடிக்கவே தொடங்கி விட்டனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மழை குறைய ஆரம்பிக்க, பத்து ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

மேலும், 5 புள்ளிகளுடன் அவர்கள் இரண்டாவது இடத்தில் இருக்க, ஆஸ்திரேலியாவை ஸ்காட்லாந்து வீழ்த்தி விட்டால் இங்கிலாந்தின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில், இங்கிலாந்தை சூப்பர் 8 முன்னேற விடாமல் ஸ்காட்லாந்துக்கு எதிராக வேண்டுமென்றே தோல்வி அடைந்து விடுவோம் என்பது போன்ற கருத்துக்களையும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த சில வீரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருக்க, ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு, ஃபீல்டிங், தொடக்க பேட்டிங் உள்ளிட்ட விஷயங்களும் அப்படி தான் இருந்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 180 ரன்களை பெற்றிருந்தது.

- Advertisement 2-

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியும் விக்கெட்டுகளை இழந்து தடுமாற கடைசியில் ஹெட் மட்டும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி கடைசி இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்தது. இதனால், ஸ்காட்லாந்து அணி வெளியேற, ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறி இருந்தது.

கடைசி பத்து ஓவர்களுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா அணியின் ஆடி ஆட்டத்தை பார்ப்பதற்கு இங்கிலாந்தை வெளியே அனுப்புவதற்கான முயற்சிகளில் இறங்கியது போல தான் தோன்றியிருந்தது. அந்த அளவுக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கோட்டை விட்டிருந்த ஆஸ்திரேலிய அணியும் மிக மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது டி20 உலக கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை தான் ஆஸ்திரேலிய அணியினர் தற்போது படைத்துள்ளனர். இதற்கு முன்பு வரை பாகிஸ்தான் 5 கேட்சுகளை ஒரே போட்டியில் தவற விட்டது தான் அதிகமாக இருக்க, அதனை தற்போது ஆஸ்திரேலிய அணி முந்தி உள்ளது.

ஃபீல்டிங்கில் சும்மா கில்லி போல இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் ரிஸ்க்கான கேட்ச்சாக இருந்தாலும் எளிதாக எடுத்து விடுவார்கள். அப்படி இருந்தும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அவர்கள் ஆறு கேட்ச்களை கோட்டை விட்டது. இதனால், இங்கிலாந்தை வெளியேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியதா என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது.

சற்று முன்