- Advertisement 3-
Homeவிளையாட்டுஒன் மேன் ஷோனா இதுதான்.. ஒற்றை காலில் வெறியாட்டம் ஆடிய மேக்ஸ்வெல்.. இரட்டை சதம் விளாசி...

ஒன் மேன் ஷோனா இதுதான்.. ஒற்றை காலில் வெறியாட்டம் ஆடிய மேக்ஸ்வெல்.. இரட்டை சதம் விளாசி சாதனை.. அரையிறுதியில் ஆஸ்திரேலியா

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிடி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் – சத்ரான் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா – சத்ரானுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய சத்ரான் அரைசதம் கடக்க, ரஹ்மத் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷாகிடி 26 ரன்களில் வெளியேற, ஆஃப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பின் அரைசதம் அடித்த் சத்ரான் ஒரு முனையில் நின்று அதிரடிக்கு மாறினார். கடைசி நேரத்தின் சதம் அடித்து அசத்திய சத்ரான், உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் ஆஃப்கான் வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் பின் கடைசி நேரத்தில் அதிரடியாக ரஷித் கான் சிக்சர்களை விளாசி தள்ளினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக ஆடிய சத்ரான் 129 ரன்களும், ரஷித் கான் 18 பந்துகாளில் 35 ரன்களும் சேர்த்தனர். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 2வது ஓவரிலேயே ஹெட் டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 24 ரன்களிலும், வார்னர் 18 ரன்களிலும், இங்லிஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த லபுஷேன் 14 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

- Advertisement 2-

தொடர்ந்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்காளிலும் ஸ்டார்க் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த மேக்ஸ்வெல் – கம்மின்ஸ் கூட்டணி சிறிது நேரம் ஆஃப்கானிஸ்தான் பவுலிங்கை நிதானமாக எதிர்கொண்டது. இதனிடையே மேக்ஸ்வெல் கொடுத்த 2 கேட்சை ஆஃப்கானிஸ்தான் ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர்.

இதனை பயன்படுத்தி மேக்ஸ்வெல் சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி தள்ளினார். ரஷித் கான், நூர் அஹ்மத், நபி, முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் உள்ளிட்ட அனைவரையும் விளாசி தள்ளினார். கம்மின்ஸை ஒரு பக்கம் வைத்துவிட்டு, மேக்ஸ்வெல் மட்டும் அதிரடியாக விளையாடினார். இதனால் 76 பந்துகளில் மேக்ஸ்வெல் சதம் விளாசினார்.

இதன்பின் மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட கால்களையே நகர்த்தாமல் மேக்ஸ்வெல் சீன் காட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சர், பவுண்டரி என்று விளாச, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது. அதில் மேக்ஸ்வெல் மட்டும் 150 ரன்களை கடந்து அசத்தினார். கடைசியாக 30 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பின் மேக்ஸ்வெல் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 201 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.

சற்று முன்