- Advertisement 3-
Homeவிளையாட்டுஒரே வீரராக ஆட்டத்தை மாற்றிய மேக்ஸ்வெல்.. 47 பந்துகளில் அதிரடி சதம்.. வேடிக்கை பார்த்த இந்திய...

ஒரே வீரராக ஆட்டத்தை மாற்றிய மேக்ஸ்வெல்.. 47 பந்துகளில் அதிரடி சதம்.. வேடிக்கை பார்த்த இந்திய பவுலர்கள்… சாம்பியன் டீம்டா நாங்க..!

- Advertisement 1-

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி இன்று களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், தொடர்ந்து வந்த இஷான் கிஷன் டக் அவுட்டாகியும் வெளியேறினார்கள். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் 39 ரன்களில் ஆட்டமிழக்க, ருதுராஜ் – திலக் வர்மா இணை சேர்ந்தது.

அதன்பின் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிக்சர்களாக பொளந்து கட்டிய அவர், 52 பந்துகளில் சதத்தை விளாசினார். அதில் மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் – ஹார்டி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் ஹார்டி 16 ரன்களிலும், அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 35 ரன்களிலும், இங்கிலிஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

- Advertisement 2-

தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் தொடக்கம் முதலே அதிரடியாக சிக்சர்களை விளாச தொடங்கினார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 ரன்களிலும், டிம் டேவிட் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். இதனால் 13.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 134 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் மேக்ஸ்வெல் – வேட் கூட்டணி அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கியது.

இதனால் கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 42 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது 19வது ஓவரை வீசிய அக்சர் படேல் பந்தில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. அதன்பின் பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவையாக இருந்தது. அதில் முதல் 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதில், மேக்ஸ்வெல் பவுண்டரி விளாசி வெற்றி பெற வைத்தார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்களை விளாசி அசத்தினார்.

சற்று முன்