வீடியோ: புயல் வேகத்தில் வந்த 20 பந்து.. அதில் 19 டாட்ஸ், 3 விக்கெட்… ஓவர் நைட்டில் உலக புகழ்பெற்ற பௌலர்.. யார் இவர்?

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர்கள் தான். பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், போலாந்த், நசீர் என்று ஒரு வேகப்பந்துவீச்சு படையையே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது. அவர்களுக்கு பின் தென்னாப்பிரிக்காவின் ரபாடா, ஆன்ரிக் நார்கியே உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்திய அணியில் என்று பார்த்தால் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரை மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களாக சர்வதேச ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் கூட வேகப்பந்துவீச்சாளர்களுக்கே கோடிகளில் பணம் கொட்டி கொடுக்கப்படும் நிலை நிலவி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து அடுத்த வேகப்பந்துவீச்சு புயல் ஒன்று புறப்பட்டுவிட்டது.

- Advertisement -

இங்கிலாந்தில் புதிய கிரிக்கெட் வடிவமான 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் தி ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு எதிரான போட்டியில் ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணிக்காக ஸ்பென்சர் ஜான்சன் என்ற இளம் வீரர் களமிறக்கப்பட்டார். முதலில் பேட்டிங் ஆடிய ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணி 100 பந்துகளில் கிளாஸனின் அதிரடியான ஆட்டத்தால் 186 ரன்களை குவித்தது.

இதையடுத்து 187 ரன்கள் என்ற அபார இலக்கை விரட்ட மான்செஸ்டர் ஒரிஜினல் அணி களமிறங்கியது. அதில் முதல் 60 பந்துகளில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து தான் வேகப்பந்துவீச்சு புயலான ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்து முதலே எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த இவரது பந்தை எதிர்கொள்ள முடியாமல் மான்செஸ்டர் அணி வீரர்கள் மிரண்டு போயினர்.

- Advertisement -

இடதுகையில் இருந்து புல்லட்டை போல் வேகமாக வந்த பந்துகளை தொட கூட எதிரணி வீரர்களால் முடியவில்லை. இந்த போட்டியில் 20 பந்துகளை வீசிய அவர், 19 பந்துகளை டாட் பாலாக வீசியதே வரலாறு. டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டை விடவும் டாட் பாலுக்கு மதிப்பு அதிகம் என்பார்கள். அந்த வகையில் 19 டாட் பால்கள் வீசியதோடு, 3 விக்கெட்டையும் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

இதனால் ஸ்பென்சர் ஜான்சன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டது. 27 வயதாகும் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணிக்காக அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு படை மேலும் வலிமையாகியுள்ளது. இவர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வுபெற்ற பின், அவருக்கான சரியான மாற்று வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்