- Advertisement -
Homeவிளையாட்டுWTC Final 2023: பெவிலியன் நோக்கி சென்று மொக்கை வாங்கிய ஆஸி வீரர்கள். அம்பயர் கொடுத்த...

WTC Final 2023: பெவிலியன் நோக்கி சென்று மொக்கை வாங்கிய ஆஸி வீரர்கள். அம்பயர் கொடுத்த டிவிஸ்ட். ஆரவாரத்தோடு கத்திய இந்திய ரசிகர்கள்

- Advertisement-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வரும் நிலையில் 3 நாட்கள் போட்டி முடிந்துள்ளது. இதில் ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை 151 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையோடு முடித்திருந்த இந்திய அணி நேற்று ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணியில் நிதானமாக விளையாடிய அஜிங்க்யே ரஹானே அதிகபட்சமாக 89 ரன்கள் சேர்த்தார். சதத்தை நெருங்கிய அவர் எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மற்றொரு வீரரான ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 296 ரன்கள் சேர்த்து பாலோ ஆனை தவிர்த்தது. இந்திய அணியின் சிராஜ் கடைசி விக்கெட்டுக்காக பேட் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

68 ஆவது ஓவரை கேமரூன் க்ரீன் வீசும்போது பந்தை காலில் வாங்கினார் சிராஜ். இதற்கு எல்பிடபுள் யு கேட்கப்பட, நடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால் சிராஜ் உடனடியாக இதற்கு டிஆர்எஸ் கேட்டார். மூன்றாம் நடுவரின் முடிவு வருவதற்குள் கவாஜா உள்ளிட்ட சில வீரர்கள் மைதானத்தில் இருந்து பெவிலியன் நோக்கி சென்றுவிட்டார்கள்.

- Advertisement-

ஆனால் டிஆர்எஸ்-ல் பந்து பேட்டில் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் கத்தினர். இதனை கவனித்து, பின்னர் நாட் அவுட் என்பதை தெரிந்துகொண்டு வீரர்கள் அவசர அவசரமாக களத்திற்கு உள்ளே வந்தனர். இந்த சம்பவம் மைதானத்தில் சிறிது நேரம் சிரிப்பலைகளை உருவாக்கியது. ஆனால் அடுத்த சில பந்துகளிலேயே ஷமி கேட்ச் கொடுத்து அவ்ட் ஆனார்.

இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே சிங்கக்குட்டி பதிரானாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஜாக்பாட் வாய்ப்பு. ஐசிசி வெளியிட்ட பதிவு. தோனி கண் பட்டா எல்லாமே சாத்தியம் தான் என புகழும் ரசிகர்கள்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 123 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது. களத்தில் கேமரூன் க்ரீன் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் உள்ளனர்.

சற்று முன்