- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன் பந்துல சிக்ஸே போனாலும் கவலையில்ல.. தில்லான திட்டத்துடன் ரெடியான அக்சர் படேல்..

என் பந்துல சிக்ஸே போனாலும் கவலையில்ல.. தில்லான திட்டத்துடன் ரெடியான அக்சர் படேல்..

- Advertisement 1-

அடுத்தடுத்து தொடர்களை தங்கள் வசமாக்கி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரையும் வென்று அசத்தி உள்ளது. முன்பு சிறிய அணியாக இருந்த ஆப்கானிஸ்தான் அணி, சமீப காலமாக சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருகிறது. இதனால், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் டி 20 தொடருக்கு முன்பாகவே அந்த அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் முதல் போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்த ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவற இந்திய அணியும் மிக எளிதாக வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஷிவம் துபே சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

அவரது அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு பெரிதாக கைகொடுக்க, 2 வது போட்டியில் அவருடன் இணைந்து இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக ஆடி அரைச்சதம் கடந்திருந்தார். 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் ஒரு முறை டக் அவுட்டானார். ஆனால், கோலி, ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோர் ரன் குவிக்க இந்திய அணியும் வெற்றியை உறுதி செய்தது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், ஆட்ட நாயகனாகவும் தேர்வாகி இருந்தார். டி 20 போட்டிகளில் இந்திய அணியின் பெரிய சொத்தாக இருக்கும் அவர், டி 20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

- Advertisement 2-

ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகு டி 20 போட்டிகளில் 2,000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் எடுத்த பெருமையை பெற்ற அக்சர் படேல், தனது பந்து வீச்சு பற்றி பேசுகையில், “இப்போது தான் நான் 200 விக்கெட்டுகள் எடுத்த விஷயமே எனக்கு தெரியும். அதே வேளையில், இந்திய அணிக்காக சிறப்பாக ஆடுவது மிகவும் முக்கியமாகும். சில ஆண்டுகள் கழித்து பார்க்கும் போதே விக்கெட்டுகள் எவ்வளவு என்று நமக்கு பெரிதாக இருக்காது.

என்னுடைய பந்து வீச்சு லெந்தினை மாற்றி மெதுவாக பந்துகளை வீச முயற்சி செய்தேன். மேலும் இதில் தற்போது தான் முன்னேற்றம் அடைந்து வருகிறேன். இதனால் பவர்பிளேவில் பந்து வீசும் திறமை கூட எனக்கு அதிகரித்துள்ளது. டி 20 கிரிக்கெட்டில் மனதளவிலும் ஒரு வீரராக நீங்கள் தயாராக வேண்டும். உங்கள் பந்தில் சிக்ஸர் போனாலும் இன்னொரு போட்டியில் அதே பந்தில் விக்கெட்டாக அது மாறவும் வாய்ப்புள்ளது.

முன்பெல்லாம் எனது பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் ரன் அடித்தால் நான் உடனே எனது திட்டத்தை மாற்றிவிடுவேன். ஆனால் இப்போது அதே திட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு பேட்ஸ்மேன்கள் அடித்தாலும் பரவாயில்லை என தைரியமாக வெற்றி பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்