- Advertisement 3-
Homeவிளையாட்டுஇவரு தான் ஆல் ரவுண்டரா.. ஜடேஜாவால் 11 வருஷமா முடியாததை.. 11 மேட்சில் செஞ்சு முடிச்ச...

இவரு தான் ஆல் ரவுண்டரா.. ஜடேஜாவால் 11 வருஷமா முடியாததை.. 11 மேட்சில் செஞ்சு முடிச்ச அக்சர் படேல்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி 10 ஆண்டுகள் கழித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி பட்டையை கிளப்பி உள்ளது. அதேபோல 2007, 2014 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாகவும் அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதி போட்டியில் அவர்கள் சந்திக்க உள்ள தென்னாபிரிக்காவை விட பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் ஒரு படி மேலே இருக்கும் இந்திய அணி தான் இந்த முறை வெற்றி பெற்று இரண்டாம் முறையாக டி20 உலக கோப்பைக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

பேட்டிங்கை பொருத்தவரையில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேவைப்படும் நேரத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர். அதே வேளையில் இன்னொரு பக்கம் பந்து வீச்சில் பும்ரா, ஹர்திக், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என அனைவரும் கூட எதிர் அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பதால் இந்திய அணியும் வெற்றிகளை எளிதாக எடுத்து வருகிறது.

லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எளிதாக வென்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றிலும் ஆஸ்திரேலியாவையும் ஒரு கை பார்த்து விட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அவர்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்கள் எடுத்திருந்தது.

அவ்வப்போது மழை குறுக்கிட்ட வண்ணம் இருந்ததால் இந்திய அணி எடுத்த 171 ரன்கள் என்பது சவாலான இலக்காக இருக்கும் என்று தெரிந்தது. அதனை நிஜமாக்கும் வகையில் பிட்ச்சின் தன்மைகளை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக கையாண்டனர்.

- Advertisement 2-

அக்சர் படேல் தனது முதல் ஓவரின் முதல் பந்திலையே பட்லர் விக்கெட்டை வீழ்த்த, இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் நிலைகுலைய தொடங்கிவிட்டது. அதிலும் அச்சர் படேல் மிகச் சிறப்பாக பந்து வீசி, பட்லர், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இப்படி இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை அடி வாங்க காரணமாக இருந்த அக்சர் படேல், ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

அப்படி ஒரு சூழலில், அக்சர் படேலுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான ஒப்பீடு ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அக்சர் படேலை போலவே ஆல் ரவுண்டராக இருக்கும் ஜடேஜா, டி20 உலக கோப்பைத் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறார்.

டெஸ்டில் சிறப்பாக பந்து வீசும் ஜடேஜா, குறைந்த ஓவர் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தடுமாற்றம் தான் தெரிகிறது. கடந்த 11 ஆண்டுகளில் இரண்டு முறை தான் டி20 சர்வதேச போட்டிகளில் அவர் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அந்த இரண்டும் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு எதிராக வந்தது தான்.

ஆனால் அதே வேளையில், அவருக்கு சமமாக இருக்கும் அக்சர் படேல், கடைசி 11 டி20 போட்டிகளில் நான்கு முறை ஆட்டநாயகன் விருது வென்று கவனம் ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்