- Advertisement 3-
Homeவிளையாட்டுநான் மட்டும் அப்படி பண்ணியிருந்தா ஒருவேளை தோத்துருப்போம்.. இந்தியா ஜெயிச்சது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த அக்சர்..

நான் மட்டும் அப்படி பண்ணியிருந்தா ஒருவேளை தோத்துருப்போம்.. இந்தியா ஜெயிச்சது இப்படித்தான்.. ரகசியம் உடைத்த அக்சர்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் தேர்வாக அதிக விமர்சனங்கள் உருவாகி இருந்தது. சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக, ஜடேஜா விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் இன்று இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேறுவதற்கு குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் முக்கிய காரணமாக மாறி உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கோலி மற்றும் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்ததும் இந்திய அணிக்கு திணறல் உருவாகி இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் இந்திய அணி நல்ல ரன்னை நோக்கி பயணிக்கவும் செய்திருந்தது.

அவர்கள் அவுட்டான பின்னர் மீண்டும் ஒரு தடுமாற்றம் உருவாகி இருந்தாலும் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் குறைந்த பந்துகளில் நல்ல பங்களிப்பை அளிக்க இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடி இருந்த இங்கிலாந்தில் ஜோஸ் பட்லர் ஆரம்பத்தில் பவுண்டரிகளை அடித்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு பீதியை கிளப்ப, அக்சர் படேல் அவரது விக்கெட் எடுத்து நிம்மதி கொடுத்திருந்தார்.

இதிலிருந்து பின்னர் இங்கிலாந்து அணியால் மீள முடியாமல் போக, அக்சர் படேல் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இறுதியில் அவர்கள் 103 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது.

- Advertisement 2-

மேலும் இந்த போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதற்கு பின் அவர் பேசுகையில், “இதற்கு முன்பு நான் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசி உள்ளதால் இந்த முறையும் அதை செயல்படுத்துவது தான் திட்டமாக இருந்தது. பிட்ச்கள் மிக லோவர் பந்துகளுக்கு சாதகமாக இருந்ததால் சரியான இடத்தில் பந்து வீசவும் முயற்சி செய்தேன்.

மேலும் பந்தை மெதுவாக வீச வேண்டும் என நினைக்க, அந்த முயற்சி எனக்கு கை கொடுக்கவும் செய்திருந்தது. ஒருவேளை நான் வேகமாக பந்துவீசி இருந்தால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்த்திருப்பார்கள். எங்களது பேட்ஸ்மேன்கள் இங்கே ஆடுவது கடினமாக இருந்ததாக தெரிவித்ததால் 160 வரைக்கும் நல்ல ஸ்கோராக தான் இருந்தது.

அதேபோல ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பும் அபாரமாக இருந்தது. தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை எடுத்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ததால் நல்ல ஸ்கோரை எட்டி இருந்தோம்” என அக்சர் படேல் கூறினார்.

சற்று முன்