- Advertisement 3-
Homeவிளையாட்டுமாஸ்டர் ப்ளான்.. அக்சர் படேல் 5 வது வீரரா உள்ள வர காரணமா இருந்த அந்த...

மாஸ்டர் ப்ளான்.. அக்சர் படேல் 5 வது வீரரா உள்ள வர காரணமா இருந்த அந்த ஒருத்தர்.. வெளியான ரகசியம்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தது போட்டிக்கு நடுவே உருவான சில திருப்புமுனைகள் தான். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது 34 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இருந்து திணறி இருந்தது.

அந்த சமயத்தில் கோலி மட்டும் களத்தில் இருக்க, அடுத்ததாக ஷிவம் துபே அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் வரலாம் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சம்மந்தமே இல்லாமல் அக்சர் படேல் ஐந்தாவது வீரராக பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்களுக்கு ஒருவித ஏமாற்றம் தான் இருந்தது. பேட்ஸ்மேன்களே அவுட்டாகி கொண்டிருக்க இவர் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்று தான் அனைவருக்குமே தோன்றியது.

ஆனால், அவரது பேட்டிங் இந்திய அணியின் ரன் குவிப்பில் மிக முக்கிய பங்கும் வகித்திருந்தது. 31 பந்துகள் சந்தித்த அக்சர் படேல் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார். இவருடன் இணைந்து ஆடிய கோலியும் 76 ரன்கள் சேர்க்க, 150 ரன்னை எட்டுமா என நினைத்த இந்திய அணி, 176 ரன்கள் எடுத்து சவாலான ஸ்கோரையும் எட்டி இருந்தது.

பந்து வீச்சிலும் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் கடைசி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசி, தென்னாபிரிக்க வெற்றிக் கனவையும் கலைத்திருந்தனர். கடைசி ஓவரில் சூர்யகுமார் அற்புதமான கேட்ச் பிடிக்க, இப்படி அணியில் இருந்த அனைவருமே நல்ல பங்களிப்பை அளிக்க, இந்திய அணி டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி இருந்தது.

- Advertisement 2-

இதனிடையே, தனது பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டதற்கு காரணம் பற்றி அக்சர் படேல் தெரிவித்த கருத்து, பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. தனது பேட்டிங் பொசிஷன் தொடர்பான தினேஷ் கார்த்திக் கேள்விக்கு பதில் தெரிவித்திருந்த அக்சர் படேல், “நான் எப்படியும் கடைசி கட்டத்தில் பேட்டிங் இறங்குவேன் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஆனால் 3 விக்கெட்டுகளை நாங்கள் விரைவில் இழந்ததால் திடீரென ராகுல் டிராவிட் என்னிடம் வந்து, பேட்டிங் செய்ய தயாராகும் படி கூறினார். இறுதி போட்டியில் அவர் அப்படி சொன்னதும் எனது பேட்டிங் பற்றி சிந்திப்பதற்கே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அப்படி அவசரமாக போய் ஆடியது எனக்கு கைக் கொடுத்தது” என அக்சர் படேல் கூறினார்.

இந்திய அணியில் வீரராக உலக கோப்பை வெல்ல முடியாமல் போன ராகுல் டிராவிட், அதே இந்திய கிரிக்கெட்டின் பயிற்சியாளராக மாறி தற்போது இப்படி பல மாஸ்டர் பிளான்களை கொடுத்து அவர்கள் கோப்பையை வெல்லவும் உதவி இருந்தார். மேலும் டி20 உலக கோப்பைத் தொடருடன் தனது பயிற்சி பணியையும் அவர் நிறைவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்