- Advertisement -
Homeவிளையாட்டுடிரெஸ்ஸிங் ரூமில் வாக்குவாதம்... பாபர் அசாம் ஷாகின் அப்ரிடி இடையே ஏற்பட்ட பிரச்சனை.. வெளியான அதிரடி...

டிரெஸ்ஸிங் ரூமில் வாக்குவாதம்… பாபர் அசாம் ஷாகின் அப்ரிடி இடையே ஏற்பட்ட பிரச்சனை.. வெளியான அதிரடி தகவல்

- Advertisement-

உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த நிலையில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை பாகிஸ்தான அணி இழந்தது.

இந்த தோல்வியால் பாகிஸ்தான் வீரர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அந்த அணி வீரர்களிடையே ஒற்றுமை குலைந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று பாபர் அசாம் வெளிப்படையாகவே சாடியிருக்கிறார். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு வீரர்களிடையே பேசிய பாபர் அசாம் கடும் சொற்களை பயன்படுத்தியதாகவும்

அதற்கு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்நாட்டு ஊடகமே செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. போட்டிக்கு பிறகு நடந்த கூட்டம் ஒன்றில் வீரர்கள் யாரும் பொறுப்புடன் விளையாடுவதில்லை என்று பாபர் அசாம் திட்டி இருக்கிறார்.

- Advertisement-

இதனால் கடுப்பான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி பாபர் அசாமின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். குறைந்தபட்சம் யார் நன்றாக பேட்டிங் செய்தார்களோ பௌலிங் செய்தார்களோ அவர்களை பாராட்டுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஷாகின் அப்ரிடி இவ்வாறு குறுக்கிட்டு பேசியதை விரும்பாத பாபர் அசாம் யார் என்ன செய்கிறார்கள்? யார் எப்படி விளையாடுகிறார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை சொல்ல தேவையில்லை என கூறியிருக்கிறார்.

வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதை உணர்ந்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டு இருக்கிறார். எனினும் இந்த செய்தி உண்மை இல்லை என பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்களிடையே ஏதோ சரி இல்லை என்பதே ஆசிய கோப்பை தொடரில் அவர்கள் விளையாடியதை காட்டியது.

சற்று முன்