இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த ஆசியக்கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது பயிற்சியினையும் துவங்கியுள்ளனர்.
இவ்வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே இலங்கை நாட்டிற்கு பயணித்துள்ள பாகிஸ்தான் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அதன்படி இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 47.1 ஓவரில் 201 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 59 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன்காரணமாக 142 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரரான பாபர் அசாம் மூன்று பந்துகளை மேட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இலங்கையில் நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீக் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்திய அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காகவே குளோபல் டி20 தொடரை நிராகரித்துவிட்டு இந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
Pakistan skipper Babar Azam departs for a duck against Afghanistan! #BabarAzam #PAKvAFG #CricketTwitter pic.twitter.com/TDmLoZzOQH
— OneCricket (@OneCricketApp) August 22, 2023
இப்படி ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நடந்த முதல் போட்டிலேயே அவர் டக் அவுட்டானது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் அவர் டக் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே இலங்கை நாட்டில் விளையாடி வரும் பாபர் அசாம் நிச்சயம் ஆசிய கோப்பையிலும் சிறப்பாக விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பே அனைவரையும் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.