சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலியுடன் ஒப்பிட்டப்பட்டு பேசப்படும் ஒரே வீரராக திகழ்ந்து வருபவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் பாபர் அசாம் இந்த இடத்தினை பிடிக்க மிகப்பெரிய கடினமான பயணத்தையே மேற்கொண்டு உள்ளார். சவசதியான குடும்ப பின்னணியில் பிறந்து பாபர் அசாம் இந்த இடத்திற்கு வளரவில்லை.
உண்ணும் உணவிற்கு கூட பாபர் அசாமில் குடும்பத்தில் கஷ்டம் இருந்த காலங்களை எல்லாம் கடந்து வந்துள்ளார். நமது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் சிலர் எப்படி வறுமையிலும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளார்களோ அது போன்ற கஷ்டங்களை பாபர் ஆசனம் பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆரம்ப கட்டத்தில் தங்களது குடும்பம் எவ்வாறு கஷ்டப்பட்டது? என்பது குறித்து பேசிய பாபர் அசாமியின் தந்தை கூறுகையில் : எங்களிடம் ஒருவர் உணவுக்கு மட்டுமே பணம் இருக்கும். அப்போது பாபர் என்னிடம், அப்பா சாப்பாடு சாப்பிட்டாயா? என்று கேட்பார். நானும் “நான் என் உணவை சாப்பிட்டேன்”, “நீ சாப்பிட்டாயா?” என்று கேட்பேன். அவரும் சாப்பிட்டதாகவே கூறி என்னை சாப்பிட சொல்வார். இப்படி நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் சொல்லி மற்றவரை சாப்பிட சொல்வோம் என பாபர் அசாமியின் தந்தை பாபர் சித்திக் தனது மகனைப் பற்றி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா தொடரின் போது பவுண்டரி லைனில் நின்று பந்து எடுப்பவராக பணியாற்றிய பாபர் அசாம், மைதானத்தில் சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட உணவை வீட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு பகிர்ந்து சாப்பிட்டதாக ஒரு முறை பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார். சில சமயங்களில் பட்டினி கிடக்கும் நிலையும் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாபர் அசாம் பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர்களான கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆகியோரின் உறவினர் ஆவார். அவர் ஒருமுறை தனது உறவினர் ஒருவருடன் நடைபெற்ற சம்பவத்தை பெயர் குறிப்பிடாமல் வெளிப்படுத்தி உள்ளார். அது இவர்கள் இருவரில் யாரோ ஒருவராகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் பாபர் அசாம் தனது உறவினரிடம் ஒரு ஜோடி காலனியை கடனாக கேட்டதாகவும் ஆனால் உறவினர் தன்னிடம் அது இல்லை என்று கூறியதாகவும் கூறினார். அந்த அளவிற்கு அவர் கிரிக்கெட்டுக்காக ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார்.
அந்த பேட்டிக்கு பிறகு உமர் அக்மலும் பாபர் அசாமுக்கு காலணிகளை வழங்க மறுத்த உறவினர்கள் யார்? என்று எனக்கு தெரியாது என்றும் நாங்கள் எப்போதுமே எங்களுடைய உறவினர்களுக்கு அனைத்து உதவியும் செய்து வருகிறோம். யாரிடமும் இல்லை என்று கூற மாட்டோம் என்று தனது பதிலை தெரிவித்து இருந்தார். இப்படி கடினமாக சூழ்நிலையில் இருந்து வந்த பாபர் இன்று உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனாக திகழ்ந்து வருகிறார். கஷ்டப்பட்டு உழைப்பவர்கள், எந்த நாட்டில் எந்த கிரிக்கெட் அணியில் இருந்தாலும் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு பாபர் அசாம் ஒரு உதாரணம் என்றே கூறலாம்.