- Advertisement -
Homeவிளையாட்டுகேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்.. நூலிழையில் தப்பித்த ரோஹித் ஷர்மாவின் முக்கிய சாதனை..

கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம்.. நூலிழையில் தப்பித்த ரோஹித் ஷர்மாவின் முக்கிய சாதனை..

- Advertisement-

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து தற்போது அந்த பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி இருக்கும் தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அதே வேளையில் பாபர் அசாம் எடுத்த முடிவால் ரோஹித்தின் முக்கியமான ஒரு சாதனை தற்போது தப்பி உள்ளது பற்றி பார்க்கலாம்.

ஒரு காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே எப்படிப்பட்ட எதிரணியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து ஆடுவதற்கு நிச்சயமாக யோசிக்கும். இன்சமாம் உல் ஹக், யூசுப் யுஹானா, யூனிஸ் கான், ஷோயப் அக்தர், முகமது ஷமி என அனைத்து வீரர்களுமே எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் கொடுத்து வந்தனர்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தான் அணியின் ஆட்டம் கவலைக்குரிய இடத்தில் தான் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரிலும் பெரிய அளவில் ஜொலிக்காத அவர்கள் சிறிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து விமர்சனத்தை சந்தித்திருந்தனர். இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக தோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறி இருந்தது பாகிஸ்தான் அணி.

தொடர்ந்து சிறிய அணிகளுக்கு எதிரான தோல்விகளால் ஐசிசி தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்த பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு கரும்புள்ளியும் வந்து சேர்ந்தது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணி அவர்களை இரண்டு டெஸ்டிலும் வீழ்த்தி தொடரையும் சொந்தமாக்கி சரித்திரம் படைத்திருந்தது.

- Advertisement-

இதனால் சொந்த மண்ணிலேயே வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியடைந்து மீண்டும் ஒருமுறை விமர்சனத்தை சந்தித்திருந்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே தங்களது அணியை விமர்சித்து நிறைய வீரர்களை மாற்ற வேண்டும் என்றும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே குறைந்த ஓவர் போட்டிகளில் கேப்டனாக இருந்து வரும் பாபர் அசாமிற்கு பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டுமே மோசமாக அமைய தற்போது அவர் பரபரப்பான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ள நிலையில் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகியது, ரோஹித் ஷர்மாவின் ஒரு முக்கியமான சாதனையை காப்பாற்றி உள்ளது.

டி20 அணியின் கேப்டனாக அதிக வெற்றியை பெற்றுள்ளது ரோஹித் ஷர்மா தான். இவர் 62 போட்டிகளில் 49 முறை இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாபர் அசாம் 48 போட்டிகளில் கேப்டனாக தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற, தற்போது பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இனி ரோஹித்தின் சாதனையை அவரால் நெருங்க முடியாது.

வரும் நாட்களில் வேறு ஏதாவது ஒரு கேப்டன் இந்த வெற்றிகளை நிச்சயம் கடப்பார்கள் என்றாலும் பாபர் அசாம் முடிவால் ரோஹித்திற்கு ஒரு நல்லது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்