ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 121 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 305 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் 70 ரன்களும், ஷஃபிக் 64 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஆட்டநாயனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் இருந்த ஆஸ்திரேலிய அணி ஒரே போட்டியில் வென்று டாப் 4க்குள் இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக விண்டேஜ் ஆஸ்திரேலிய அணி வந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசுகம் போது, பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் வார்னர் போன்ற ஒரு வீரரின் கேட்சை கோட்டைவிட்டால், அவரை கட்டுப்படுத்த முடியாது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. பெரிய ஸ்கோருக்கு பெயர் போன மைதானம். அதனால் இங்கு தவறுகள் குறைவாக இருக்க வேண்டும்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டு வர வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், பவுலர்களுக்கும் தான் காரணமாக சொல்ல வேண்டும். குறிப்பாக கடைசி சில ஓவர்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. பேட்டிங்கின் போது எங்களால் முடியும் என்று நம்பினோம். கடந்த முறை செய்ததை போல் மீண்டும் செய்ய முயற்சித்தோம். இரண்டாவது பேட்டிங்கின் போது பால் நன்றாக பேட்டிற்கு வந்தது.
ஆனால் மிடில் ஓவர்களில் பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. அதேபோல் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம். ஆனால் பேட்டிங்கின் போது மிடில் ஓவர்களில் தவறைவிட்டோம் என்று கூறியுள்ளார். இந்த தோல்வியின் மூலமாக பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.