எல்லாம் எங்களுக்கு சாதகமா தான் இருக்கு… எங்களோட பலமே இது தான்.. இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பாபர் அசாம் பேச்சு

- Advertisement -

இலங்கையில் நடைபெறும் ஆசியகோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இப்போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. கடந்தமுறை இவ்விரு அணிகள் லீக் போட்டியில் சந்தித்தன. அப்போது ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் தவிர மற்ற பேட்டர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறினர்.

இருப்பினும் இந்திய அணி 266 ரன்களை எட்டியது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் நாளையே போட்டியின் போது மழை குறுக்கிடுமோ என்ற கேள்வி இருந்தது. நாளைய போட்டியில் மழை குறுக்கிட்டாலும், நாளை மறுநாள் ரிசர்வ் டேவில் போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

- Advertisement -

இந்நிலையில், நாளைய போட்டியில் வெற்றிபெற தங்களுக்கு தான் சாதகம் அதிகம் உள்ளதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். இது குறித்து பேசும் போது, இலங்கையில் நாங்கள் இரண்டரை மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடுகிறோம். டெஸ்ட் தொடர், லங்கன் ப்ரிமியர் லீக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் தற்போது ஆசிய கோப்பை என தொடர்ந்து விளையாடுவதால் நாளைய போட்டியில் நாங்கள் இந்தியாவை வீழ்த்த சாதகம் அதிகம் உள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ரகசியம் குறித்து பேசிய அவர், எங்களது பந்துவீச்சாளர்களை கண்டு நான் பெருமைபடுகிறேன். நாங்கள் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செலுத்துகிறோம். பெரிய போட்டிகள் மற்றும் தொடர்களில் பந்துவீச்சாளர்களே எங்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர். எனக்கு எப்போதும் அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் ஒற்றுமையுடனும் அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதும் தான் எங்களது வெற்றியின் ரகசியம். ஒருவேலை ஒரு பந்துவீச்சாளர் சரியாக செயல்படவில்லை என்றாலும் மற்ற பந்துவீச்சாளர்கள் பொறுப்புடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்றார்.

நாளைய போட்டியில் 90 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்த கேள்விக்கு, எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நான்கு நாட்கள் மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்ததால் மழை பெய்யும் என தெரியவில்லை. ஆனால் கிடைக்கும் நேரத்தை எங்கள் திறமைக்கு ஏற்றவாறு பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்” என பதில் கூறினார்.

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரஃப் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். ஆசிய கோப்பையில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய இந்த கூட்டணி 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்