- Advertisement -
Homeவிளையாட்டுபிளான் பண்ணி அட்டாக் பண்ணிட்டாங்க... எங்க தோல்விக்கு காரணம் இது தான்... வருந்தி பேசிய பாபர்...

பிளான் பண்ணி அட்டாக் பண்ணிட்டாங்க… எங்க தோல்விக்கு காரணம் இது தான்… வருந்தி பேசிய பாபர் அசாம்

- Advertisement-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை குரூப் 4 போட்டி நேற்று முடிவடைந்தது. செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் விட்ட இடத்தில் இருந்து துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடினார்கள் என்றே கூற வேண்டும்.

ரோகித் சர்மா மற்றும் சுப்மென் கில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை துவங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அவர்கள் துவக்கத்திலேயே திணறடித்து விட்டார்கள். அவர்களை தொடர்ந்து வந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும் போகப்போக தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 356 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 56 ரன்களும் சுப்மென் கில் 58 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்க கோலி 122 ரன்களும் கேஎல் ராகுல் 111 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மறுபுறம் பாகிஸ்தான் அணியோ 32 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்து தங்களது ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் விளைவாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே சமயம் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆட்டம் முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்,

- Advertisement-

ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் எங்கள் பவுலர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்று பிளான் செய்து அதை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களை தொடர்ந்து வந்து விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் சிறப்பாகவே ஆடினார்கள்.

அதேபோல் இந்திய பவுலர்கள் முதல் பத்து ஓவர்களில் மிகச் சிறப்பாக ஸ்விங் செய்து பந்து வீசினார்கள். நாங்கள் பேட்டிங்கில் மோசமாக விளையாடினோம். அடுத்தடுத்த விக்கட்டுகள் விழுந்ததால் எங்களால் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்ய முடியவில்லை. நாங்கள் தோற்றதற்கு அதுவே முக்கியமான காரணம் என கூறியுள்ளார்.

சற்று முன்