அடுத்து இந்தியாவிற்கு எதிரான போட்டி… 100% கொடுப்போம்.. பிட்ச் பத்தி நல்லா தெரியும்.. 4வது பவுலர் அருமை.. பங்களாதேஷ் வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் பேட்டி

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பையின் இரண்டாவது சுற்று முதல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் 38.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் பெரிதாக ரன் அடிக்கவில்லை. ஆனால் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இருவருமே அரை சதங்கள் அடிக்க பாகிஸ்தான் அணியின் வெற்றி நிச்சயமானது. இந்த போட்டியில் பாகிஸ்தான அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் முகமது ரிஸ்வான் 63 ரன்களும் இமாம்-உல்-ஹக் 78 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய பாபர் ஆசாம், நான் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் கிரெடிட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் பந்து வீசியது மிகவும் சிறப்பாக இருந்தது. அதேசமயம் இந்த போட்டியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து பேச்சாளரையும் சேர்த்தோம். காரணம் நாங்கள் இதுபோன்று மேட்ச்சை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

இந்த பீச்சும் வேகப்பந்து பேச்சாளர்களுக்கு சாதகமானது. அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஹாரிஸ் ரௌஃப் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். ரசிகர்களின் ஆதரவு அருமையாக இருந்தது. நாங்கள் எப்போது இந்த மைதானத்தில் விளையாடினாலும் அவர்கள் எங்களை ஆதரிப்பதுண்டு. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நிச்சயம் இந்த போட்டியை என்ஜாய் செய்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

அடுத்த போட்டிக்காக கொழும்பு செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். எங்கள் அணியை பொறுத்தவரை அதிகப்படியாக பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்காக எங்கள் அணியை சிறப்பாக பார்த்துக் கொள்ளும் குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளோம். அதற்காக எங்களுக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடையாது. எந்த ஒரு போட்டியிலும் நாங்கள் எங்களுடைய சிறப்பான விளையாட்டை கொடுக்க வேண்டும் என்று நினைப்போம். கண்டிப்பாக அடுத்த போட்டியிலும் எங்களுடைய 100 சதவீதத்தை வெளிப்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்