- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய கிரௌண்ட்ல இப்படி ஒரு பிரச்சனை இருக்கு... எங்களுடைய பலமே இது தான் - பாபர்...

இந்திய கிரௌண்ட்ல இப்படி ஒரு பிரச்சனை இருக்கு… எங்களுடைய பலமே இது தான் – பாபர் அசாம் பேச்சு

- Advertisement-

தொடருக்கு அடுத்து ஏழு ஆண்டுகள் கழித்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 50 ஓவர் உலககோப்பை போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாகவே இரு தரப்பு தொடர் நடைபெறாத வேளையில் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி 50 ஓவர் உலக கோப்பைத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ள வேளையில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து தற்போது பயிற்சி போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஹைதராபாத் நகருக்கு வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை அடுத்து பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் எங்களுக்கு கிடைக்கும் உபசரிப்பு மிக அருமையாக உள்ளது என ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருந்தார். அதோடு ஒரு வாரம் நாங்கள் இந்தியாவில் இருந்துள்ளோம் இது எங்களுக்கு இந்தியா போன்றே தெரியவில்லை சொந்த மண்ணில் இருப்பது போல அவ்வளவு சௌகரியமாக இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஹைதராபாத் பிரியாணி பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அதனை சாப்பிடுவதற்கு அருமையாக உள்ளது என பாபர் அசாம் கூறினார். மேலும் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியாவில் உள்ள பவுண்டரி எல்லைகள் சற்று சிறியதாக இருப்பதாகவே நினைக்கிறேன். எனவே எதிர்வரும் ஆறு வாரங்கள் பவுலர்களுக்கு சற்று வேலை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement-

ஏனெனில் பவுண்டரி எல்லைகள் சிறியதாக உள்ளதால் பவுலர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை பந்துவீச்சில் சற்று நிதானம் இழந்தால் கூட பேட்ஸ்மேன்கள் அதனை பயன்படுத்தி பெரிய ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள். எனவே அடுத்து வரும் ஆறு வாரங்கள் பவுலர்களுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது என்று கூறினார். மேலும் தங்களது அணி குறித்து தொடர்ந்து பேசிய அவர் : ஷாஹீன் அப்ரிடி எங்களது பவுலிங் யூனிட்டில் முக்கியமான ஒரு வீரர். அவரிடம் இருந்து இன்னும் அதிகமான செயல்பாடுகளை நான் எதிர்பார்க்கிறேன்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறோம். என்னை பொறுத்தவரை எங்களது அணிக்கு பவுலிங் மிகப்பெரிய பலம் என்று பாபர் அசாம் பேசினார். இருப்பினும் இந்த உலககோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் தோள்பட்டை காயம் காரணமாக அந்த அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்