- Advertisement -
Homeவிளையாட்டுநேற்று மீண்டும் ஒரு கோலி ரெகார்ட் காலி... வெறும் 17 ரன்னில் மெகா சாதனையை காலி...

நேற்று மீண்டும் ஒரு கோலி ரெகார்ட் காலி… வெறும் 17 ரன்னில் மெகா சாதனையை காலி செய்த பாபர் அசாம்..

- Advertisement-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்து வருகிறார். அதோடு டி20 கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது இடத்தில் இருக்கும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நான்காவது இடத்தில் உள்ளார். இப்படி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசுத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டு வருகிறார்.

அந்த அளவிற்கு அவரது ஆட்டம் தற்போது மிகச் சிறப்பான கட்டத்தில் உள்ளது. 28 வயதான பாபர் அசாம் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக முல்தான் நகரில் நடைபெற்ற போட்டியில் 151 ரன்களை குவித்த அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் ஃபோர் போட்டியிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதன்படி வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 22 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்களை அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினையும் பாபர் அசாம் முறியடித்துள்ளார். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் குவித்தன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிவேகமாக 2000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement-

இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக தனது 36-வது இன்னிங்ஸில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை பூர்த்தி செய்து இருந்தார். அதேவேளையில் தற்போது பாபர் அசாம் தனது 31-வது இன்னிங்ஸ்லேயே கேப்டனாக 2000 ரன்களை பூர்த்தி செய்து விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் 41 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் 47 போட்டியிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்