சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நன்றி கூறினால் ராசியே இல்லையா? என்னப்பா சொல்றீங்க? – கலங்கடிக்கும் சம்பவங்கள்!

- Advertisement -

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகள் கொரோனோ காரணமாக போட்டிகள் இந்தியாவில் நடக்காத நிலையில் இந்த ஆண்டுதான் முழு ஐபிஎல் தொடரும் இந்தியாவில் நடக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 ஆவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

விரைவில் லீக் போட்டிகள் முடிந்து ப்ளே ஆஃப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகள் தங்கள் வெற்றிக்காக போராடி வருகின்றன. இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்போதுமே, இந்திய அளவில் மாநிலம் கடந்தும் கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் அந்த அணிக்கு மைதானத்திலும், சமூகவலைதளங்களிலும் கூடுதல் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாகத்தில் நடந்த போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணியினர் தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வு பூர்வமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஆனால் ஒவ்வொரு முறை சிஎஸ்கே அணி இப்படி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தும் போதெல்லாம், ஐபிஎல் தொடரில் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன என சமூகவலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன. முதல் முதலாக 2008 அம் ஆண்டு சிஎஸ்கே அணி தனது ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நன்றி கூறும் நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பாதுகாப்பு காரணங்களால் ஐபிஎல் தொடரே தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: மும்பையின் தோல்வி ஆர்சிபிக்கு சாதகமா? அவர்கள் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு எப்படி உள்ளது? – முழு விவரம்

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் நன்றி கூறும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்டது. இதுபோல துரதிர்ஷ்டவசமான சம்பவம் மூன்றாவது முறையும் நடந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நன்றி கூறும் நிகழ்ச்சிக்கு பிறகு 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு நன்றி கூறும் நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஏதாவது நடந்துவிடுமோ என இப்போதே ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

சற்று முன்